Posts

Showing posts from January, 2023

பரராஜசேகரப்பிள்ளையார்

 அப்பனுக்கு மூத்த பிள்ளை ஆனை முகத்துப்பிள்ளை ஒப்பில்லாத பிள்ளை ஓங்கார வடிவப்பிள்ளை  முப்பழம் விரும்பியுண்ணும் தொப்பை வயிற்றுப்பிள்ளை முப்பொழுதும் தொழுதிடவே அபயம் அளிக்கும் பிள்ளை  இணுவில் பரராசசேகரன் துணை 🙏 இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் #நித்தியதாஸ்

தாடி வளர்த்து பார்

 தாடி வளர்த்துப்பார் சன்னதி கைதடி இரண்டில் ஒன்று நிச்சயம் 😁😁😁 தாடி வளர்த்து பார் சன்னியாசி போல் உணர்வாய்  உன் முகம் உனக்கே மறந்து போகும் உன் விம்பம் இதுவல்ல கண்ணாடியும் குழம்பும் சலூன் செலவு குறையும்  சம்போ செலவு அதிகமாகும் நொடிக்கொரு முறை வருடுவாய்  முப்பது முறை முகம் கழுவுவாய் மாஸ்க் போட்டு திரிந்தாலும்  கடன்காரன் கண்டுபிடிப்பான் கன்னிப்பெண்கள் பார்த்து ரசித்த முகத்தை பல முதிர்கன்னிகள் பார்த்து ரசிப்பர் தாடி வளர்த்து பார்  காக்கை மட்டுமே உன்னை கவனிக்கும் உன்னைசுற்றி அது வட்டமிடும் காணாமல் போன தன் கூட்டை நீ களவாடி விட்டதாக புலம்பும் தாடியின் இடைவெளிகளில் உருவமில்லா ஏதோ ஒன்று ஊர்வதுபோல் உணர்வாய்  தாடிக்கொரு சீப்பு தலைக்கொரு சீப்பு வைப்பாய் தாடிக்குள் சிக்கியே சீப்பும் உடையும் தாடி வளர்த்து பார்  ஆரென்றே தெரியாதவரெல்லாம் அறுபத்தெட்டு கேள்வி கேட்பார்  என்ன விறுத்தம் என்பார் நல்ல வருத்தம் என்பார் சாமி என்று சொல்வார் ஆசாமி என்றும் சொல்வார்  தாடி வளர்த்துப் பார்  தன்னை போல கிளீன் சேவ் எடுத்து திரியும்படி முப்பது வயதாகியும் மீசைகூட முள...

சந்நிதி முருகன்🙏

 அந்தம் இல்லாதவனே அன்னதான கந்தனே கந்தக் கடவுளே என்னை காந்தமாய் ஈர்ப்போனே எந்தன் உள்ளொளியானவனே ஏகாந்தம் தருபவனே வந்தவினை அறுப்போனே வங்கக்கடல் தாண்டி வந்தோனே சிந்தையில் நிறைந்தவனே சிங்கார வேலவனே எந்தையாய் இருப்போனே எந்நிதியும் தருவோனே உந்தன் சந்நிதி தேடி வந்தேன் உன்மத்தம் ஆகிநின்றேன் எந்தன் சந்ததியை காத்தருள்வாய் சந்நிதி வேலையா ஓம் சரவணபவ 🙏 சந்நிதி முருகன் துணை 🙏 ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️

கருணாகர பிள்ளையார் தேர் 🙏

 சீர் இணுவைப்பதி எல்லை அமர்ந்தாய் ஊர் காக்கும் கருணாகரனே  தேர் ஏறி வந்து காட்சி தந்தாய் பார் போற்றும் பதியானவனே  ஏர் பிடிப்போர்க்கு துணையானாய் ஏரம்ப மூர்த்தி ஆனவனே  ஊர் கூடி வடம்பிடித்தோம் உன்னடி தொழுதுநின்றோம்  கருணைக் கடலே கருணாகர கடவுளே  காருண்ய நாதனே காக்கும் கடவுளே  முருகனவன் சோதரனே மூஞ்சூறு வாகனனே திருமாலின் மருகோனே பெருவாழ்வு தருவாயே கருணாகர பிள்ளையார் துணை 🙏

சந்நிதி முருகன் 🙏

தேரேறும் அழகன் தெய்வயானை மணாளன் காரார் குழலழகி வனக்குறத்தி மனத்துறைந்தோன்  பாராளும் நாயகன் பார்வதி மைந்தனிவன் கூரான வேல்கொண்டு சூரனுடன் போர் வென்றோன்  ஆரா அமுதனிவன் அழகன் முருகனிவன் தீரா வினையறுப்போன் தாராள அருள்தருவோன் நாராயணன் மருகன் நான் விரும்பும் முருகன் தேரேறி அருள் தந்தான் ஆற்றங்கரை வேலனிவன்  ஓம் சரவணபவ 🙏 சந்நிதி வேலன் துணை 🙏

சந்நிதி முருகன் 🙏

 காற்று வந்து எந்தன் காதில்    கந்தன் நாமம் ஓதியதே  ஆற்றங்கரையில் மோதும் அலைகள்              அழகன் நாமம் கூறியதே ஊற்றாய் என்னுள் இருக்கும் நாதன்        தேற்றி எனையும் ஆற்றுவோன் ஏற்றுக்கொண்டு தினம் எனக்கு      ஏற்றம் தந்து அருளுவோன்  போற்றிக் கதிர்காமர் பூசித்த வேலன்      போற்றித் தொழும் அடியார் சூழ தோற்றம் கொண்ட சந்நிதியில்     தீர்த்தமாடி மகிழ்கின்றான் ஓம் சரவணபவ 🙏 சந்நிதி முருகன் துணை 🙏 ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️

பாரதீ 🔥

தமிழின் மீசை உதிர்ந்த நாள்  திமிரின் மறுபெயர் மறைந்த நாள்   திமிறி எழுந்த அந்நியக் காளைகளை  திமில் எனும் தமிழ் பிடித்து திணறி ஓட வைத்தவனை  தரணி தொலைத்த நாளும் இதுவே மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் 🙏

நாடகம் பார்க்க வாறீர்

 நான் பார்த்தீபன் பேசுகிறேன்  நாடகம் பார்க்க வாறீர் நல்லை வீதியிலே அரசியல் நாடகம் பார்க்க வாறீர்  நாடிழந்து வீடிழந்து காடலைந்து  நாமலைந்த காரணத்தை யாரறிவார்  நாமிழந்த உயிர்கள் எத்தனையோ ஏனிழந்தோம் காரணத்தை யாரறிவார்  நாவறண்டு பேச்சிழந்து மூச்சிழந்து நானிறந்த காரணத்தை யாரறிவார்  வேல் கொண்டு போர் வென்ற கந்தன் வீதியிலே  வாய் கொண்டு போர் செய்யும்  வேடிக்கை காண வாரீர்  களமாடிய வேளை வேடிக்கை பார்த்தோர்  நிலைமாறி கைகலப்பு செய்கின்றார்  நாவறண்டு பேச்சிழந்து மூச்சு முட்டி நான் போன இடம் வரத் துடிக்கின்றார் நாடகம் பார்க்க வாறீர் நல்லை வீதியிலே அரசியல் நாடகம் பார்க்க வாறீர்

மானம்பூ சிவகாமி அம்மன்

விழாக்கோலம் பூண்டதே இணுவை வீழாத வீரம் கொண்ட மண்ணிலே  வில் அம்பு கையில் கொண்டே வேட்டைக்கு புறப்பட்டாள் எம் அன்னை  மேள தாள இசையும் முழங்கிட  நிலாவென ஒளிரும் முகத்துடன்  உலா வரும் தோரணை கண்டு தொழாமல் நான் இருப்பேனோ  பக்திப் பாமாலை பாடிட  பக்தர் பரவச நிலையில் ஆடிட மனமும் ஓயாது நினைந்திட மலங்கள் ஒருங்கே ஒடுங்கிட நலங்கள் யாவும் தந்திட  வரங்கள் யாவும் அருளிட வெள்ளைப் புரவி மீதில் ஏறி உள்ளமதை குளிர்வித்தாள்  வானம் இருண்ட நேரத்திலே வாழை எனும் வன்னியில் ஒளிந்திட்ட மகிடன் எனும் அசுரனை அழித்திட முருகனிடம் வேல் வாங்கியே  மானம்பூ நாளில் மகிடனை அழித்தாளே மனமதுவும் மகிழ்ச்சியில் திளைத்ததே ஓம் சக்தி 🙏🙏🙏

இணுவை_சிவகாமி_அம்மன் தங்கரத பவனி

 தங்க ரதம் மீதிலேறும்  எங்கள் சிவகாமி அம்மன் மிளிரும் அழகினில் மனமும் மயங்கிடுமே  திங்களும் கீழிறங்கியதே  அங்க ஒளி வாங்கிடவோ  நின்பதமே தொழுது நின்றேன் நிறை கருணை தந்திடம்மா  கங்குல் குழல் பொங்கும் எழில் கொண்ட சிவகாமி அம்மை வண்டு தங்கும் மலர்க் கூந்தல் வண்ணம் பச்சை உடையுடுத்தி  தெங்கு பனை கமுகு வாழை ஓங்கி வளர் இணுவையில்  சிந்துகின்ற அருளோடு தங்கரத மேறி வாறாள்   🙏🙏🙏 #இணுவை_சிவகாமி_அம்மன் தங்கரத பவனி

இணுவைக் கந்தன்🙏

 பெருமஞ்ச நாயகனாம் பரராசன் சோதரனாம்  ஆறுமுக சுவாமியராம் ஆதிசிவன் பாலகனாம்  சீரிணுவைப் பதியினிலே குடியேறினார் திருவீதி வலம் வந்தே அருள்பாலித்தார் ஓம் சரவணபவ🙏 இணுவைக் கந்தன் துணை 🙏

இணுவைக் கந்தன்🙏

ஆயிரம் ஆதவன் ஒளிர்ந்திடும் ஆறுமுகன்  வாயிலில் வந்து நின்ற வாசவன் மருகன் போர்க்களம் புகுந்தான் சூரியத் தேரில்  ஈர்த்தென்னை மயக்கினான் இணுவை ஊரில் ஓம் சரவணபவ🙏 இணுவைக் கந்தன் சரணம் 🙏 #இணுவை_நித்தியதாஸ்_இணுவைக்கந்தன்  

மஞ்சத்தடி முருகன்🙏

 மஞ்சத்தடி முருகன் மஞ்ஞை ஏறி வந்திடுவான்  நெஞ்சத்தடி இருப்போன் நிறைகருணை தந்திடுவான் தஞ்சமென்று வருவோர்க்கு தாராள அருள் தருவான் அஞ்சுதல் நீக்கிடுவான் ஆறுதல் தந்திடுவான்    ஓம் சரவணபவ🙏 மஞ்சத்தடி முருகா சரணம் 🙏 #இணுவில் மஞ்சத்தடி #

இணுவைக் கந்தன் 🙏

தணிகை வாழ்வோன் தரணி ஆழ்வோன்  பிணிகள் களைவோன் பிழைகள் பொறுப்போன்  அணுவில் கலந்தோன் அகிலம் அளந்தோன்  இணுவில் அமர்ந்தான் அழகில் கவர்ந்தான்  ஓம் சரவணபவ 🙏 இணுவைக் கந்தன் சரணம் 🙏 #இணுவில்_கந்தசுவாமி_கோவில் 

இணுவைக் கந்தன்🙏

தணிகை வாழ்வோன் தரணி ஆழ்வோன்  பிணிகள் களைவோன் பிழைகள் பொறுப்போன்  அணுவில் கலந்தோன் அகிலம் அளந்தோன்  இணுவில் அமர்ந்தான் அழகில் கவர்ந்தான்  ஓம் சரவணபவ 🙏 இணுவைக் கந்தன் சரணம் 🙏 இணுவில்_கந்தசுவாமி_கோவில் 

மஞ்சத்தடி முருகன்🙏

 மஞ்சத்தடி முருகன் மஞ்ஞை ஏறி வந்திடுவான்  நெஞ்சத்தடி இருப்போன் நிறைகருணை தந்திடுவான் தஞ்சமென்று வருவோர்க்கு தாராள அருள் தருவான் அஞ்சுதல் நீக்கிடுவான் ஆறுதல் தந்திடுவான்    ஓம் சரவணபவ🙏 மஞ்சத்தடி முருகா சரணம் 🙏

இணுவைக் கந்தன் திருப்புகழ் 🙏

Image
 இணுவைக் கந்தன் திருப்புகழ் 🙏 அழகு மிளிரும் நிலவு ஒளிரும் வதனம் உடைய குமரோனே! களிறு வதனம் சுளகு செவிகள்  உடைய கபிலருக் கிளையோனே! அலைகள் உயரும்  பெரிய கடலில் துயிலும் அரியின் மருகோனே!  மலையில் உறையும் குறத்தி மனத்தில் உறையும்  அழகு முருகோனே!  மரத்தில் ஒளிந்த அசுரன் உடலை தறிக்க அயிலை விடும்வேலா! பரமன் மகனே பரந்த புயனே விரைந்து மயிலில் வருவாயே!  அருண கிரிநின் புகழைப் பாட  அடிகள் எடுத்து கொடுத்தாயே! வரத்தை அதுபோல் எனக்கு அளித்துன் புகழைப் பாட அருள்வாயே! அணுவில் கலந்து அகிலம் அளந்து அமரர் துயரை துடைத்தோனே! இணுவில் மண்ணில் அமர்ந்து அருளும் நொச்சியொல்லைப் பெருமாளே! ஓம் சரவணபவ 🙏 இணுவைக் கந்தன் சரணம் 🙏

இசையும் அசைவும் ❤

Image
புலர்ந்திடும் காலையில்  எழுந்திடும் சூரியன்  எறிந்திடும் கதிரென்னை எழுப்பியதே மலர்ந்திடும் பூக்களும் நுழைந்திடும் வண்டுகள் இசைப்பது கேட்டுத் தலையாட்டியதே இயற்கை அன்னை படைப்பில் காணும் காட்சி எங்கும் இசையை கேள் பாயும் அருவி  தாவும் தவளை தூவும் மழையில் யாவும் இசைகேள் சலசலக்கும் நீரோடை குதூகளிக்கும் மீனினங்கள் கலகலக்கும் தென்னோலை கிளியினொலி கேள் சரசரக்கும் மானினங்கள்  இசையெழுப்பும் குயிலினங்கள்  இசைக்காடும் மயிலினங்கள்  புல்லினங்கள் பார்  இயற்கையின் அழகுடன்  இணைந்திடும் இசைதனை இதுவரை எவரும் ரசித்ததுண்டா இறைவனின் படைப்பினில்  இயற்கையின் காட்சியில் இசைப்பதும் அசைவதும் யாவுமழகே 🌴🌳🌷🍂🦥🦌🦜🦚🐝🦋🐦 #இயற்கை_என்_காதலி இணுவை நித்தியதாஸ்

மேலான காதல் என்பது மேலைத்தேயம் மீதானது

Image
பொத்தி வச்ச பூஞ்செடி - உன்னை சுத்தி வந்தேன் நானடி சத்தக கண்ணால் சீவுறாய் - எதுக்கு  சண்டித்தனம் காட்டுறாய்  வத்தலா நான் காயிறன் - வீட்டு வாசலில தான் கிடக்கிறன்  வித்தை பல காட்டுறாய் - நின்று  வேடிக்கை நான் பார்க்கிறேன்  அத்தை மகள் பூங்கொடி - ஏனோ   அடம்பிடித்து இருக்கிறாய் ஒத்தையில நான் நிக்கிறன் - நீயோ ஒதுக்கி வச்சு நடக்கிறாய்  பத்தி இதயம் எரியுதடி - வீணா  புத்திகெட்டு காதலிச்சன்  கத்திக் கத்தி அழுதழுது - எமக்கு காலம் வீணா போகுதடி  வாழைத் தண்டே வாச செண்டே -உன் மேல நானும் ஆசை கொண்டேன் நாளும் உன்னை எண்ணி எண்ணி ஏழை நானும் வாடுறண்டி  ஆளான நாள் முதலா ஆதாரமானவளே ஆழமான காதல் என்றெல்லாம் சொன்னவளே  மேலான காதலை உதறித் தள்ளிவிட்டு  மேலைத்தேயம் போக எப்படித்தான் துணிந்தாயோ

இயற்கை என் காதலி 2

Image
அழகான காலைப் பொழுதில் அவளை நான் கண்டேன் பேரழகி அவள் பச்சை உடுத்தியிருந்தாள்  பனித்துளிகள் அவள் உடலை நனைத்திருந்தன  பூக்களாய் பூத்துக் குலுங்கினாள் படடாம்பூச்சியாய் இறக்கை அடித்து பறந்தாள் காற்றாய் வந்து தலை கோதினாள்  தென்றலாய் வந்து தாலாட்டினாள்  அவளின் ஏற்ற இறக்கங்களும் வளைவு நெழிவுகளும்  என்னை  நகராமல் நிற்கச்செய்தன  அருவி எனும் கூந்தலில் முகம் புதைத்து இதழ் நனைத்து மோகம் தீர்த்தேன்  இயற்கை என் காதலி❤

தீராத போதை ❤

Image
தீராத போதையே தீர்வாகும் போதையே  தீயான போதையே திமிரான போதையே  திளைத்தேன் உன் மீதே  திகைத்தேன் அப்போதே கோதை உனை ரசித்தே தா தை எனக் குதித்தேன்  கண்கள் போதை கன்னங்கள் போதை புன்னகை போதை பொன்னிறம் போதை  இதழ்கள் போதை விரல்கள் போதை கருங்குழல் போதை கழுத்திலும் போதை காதலான போதை கன்னி காட்டும் போதை தேவையான போதை தேவதை இவள் போதை இடை விடாத போதை இதழ் படாத போதை இணை தொடாத போதை எனை விடாத போதை  புதிதானது இந்த போதை புரியாதது இந்த போதை  போதாது இந்த போதை போவேனா இப்போதே  இப்போதை எப்போது எனைச் சேருமோ அப்போது இப்போதை எனக்காகுமோ ❤

பார்த்தீபம் 🔥

ஈடு இணை இல்லாதவன் எம் உள்ளத்தில் ஒளிர்கின்றவன் ஈனக் கயவர் மத்தியில் தமிழர் வாழத் தவம் செய்தவன் ஈழக்கனவை மனதில் கொண்டே இகத்தில்  ஈகைப் பொருளாய் தன்னுயிரை தந்தவன்  🔥🙏🔥

நவீன சரஸ்வதி சபதம்

Image
வென்றால் போதுமென்று வெற்று வாக்குறுதி வழங்கிவிட்டு   வென்ற பின்னே எதுவும் செய்யாமல் கண்டபடி எல்லாம் விலை ஏற்றியவனை  கண்டால் வரச்சொல்லுங்கோ சகலதும் விலை சகலகலாவல்லியே! 1 நாடும் கடன் சுமை பொருள் விலை நோய்நொடி துன்பம்  மேடும் பள்ளமும்தான் வாழ்க்கை என்பர் நாடே பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கு  சூடும் சுரணையும் இல்லா கேடு கெட்டவர் ஆட்சியில்  வாடும் மக்களுக்கு மீள என்ன வழி சகலதும் விலை சகலகலாவல்லியே! 2  அழிக்கும் ஆயுதங்கள் கொத்துக்குண்டுகள் தாண்டி வழிக்கு வழி எம் உறவுகள் மடிவது கண்டு கனத்து குழிக்குள் பயந்து ஒழித்து வாழ்ந்து மீண்டு வந்தால் பழிக்குத் தான் வாழ்க்கையா என்றே எண்ணத்தோன்றுது சகலதும் விலை சகலகலாவல்லியே! 3  தூக்கும் பல்லக்கில் அவர்கள் வாழ்க்கை வகை வகையாய் உணவுகள்  வாக்கு வங்கியை நிரப்பியோரின்  வயிறு நிரப்ப என்ன வழி சாக்குப் போக்கு சொல்லி பேக்காட்டுவதும் எதுக்காக  நாக்கு வறண்டு உயிர் போக வேண்டாமே  சகலதும் விலை சகலகலாவல்லியே! 4 பஞ்சத்தில் மக்கள் பரிதவிக்க பஞ்சுமெத்தையில் அவர்கள் உறக்கம் நெஞ்சம் கனத்து வெடிக்கிறது விலைவாசி கேட்டுக் ...

பார்த்தீபம் 🔥

Image
ஒரு தீ🔥  பெரும் தீ🔥  விடுதலைத் தீ🔥 அதை நிறுத் தி🔥 ஒரு தீ🔥 அரும் தீ தமிழ் அருந் தி🔥 தானே வருந் தி🔥 ஒரு தீ🔥 வேள்வித் தீ🔥 தமிழ்த் தீ🔥 உணர்வு பொருத் தி🔥 ஒரு தீ🔥 உள்ளே கொழுத் தி🔥 உடல் வருத் தி🔥  உலகுக்கு உணர்த் தி🔥  ஒரு தீ🔥 கனத்த தீ🔥 காட்டுத் தீ🔥 கட்டுப்படாத் தீ🔥 ஒரு தீ🔥 ஆழ்மனத் தீ🔥 அடங்காத் தீ 🔥 அணையாத் தீ🔥  அத் தீ🔥 தியாகத் தீ🔥 எம் உயிர்த் தீ🔥 அதுவே பார்த் தீ🔥 🙏🙏🙏

இருப்பினும் நீ எனதில்லை

Image
இருபது வயதினள் இருவிழி கணைகள்   இருவரிக் குறள் இதழ் இருள் உறையும் குழல் இருத்தினேன் உன்னை  இருதயத்தின் உள்ளே  இருக்கையில் எந்தன்  இருக்கையும் மகிழுதடி  இருப்பிடம் சிறக்குதடி  இருப்பினும் நீ எனதில்லையே

குந்தவை பிராட்டியார்

Image
  இந்திரன் மகளோ இங்கித குணமோ குந்தவை இவளோ குன்றாத அழகோ  சந்திர முகமோ சங்குக் கழுத்தோ சுந்தர வனப்பொளிரும் சுந்தரசோழர் மகளிவளோ சந்தன உடலோ சீண்டியது எதுவோ  செம்பவள வாயழகோ  செங்கரும்பின் சாறிதழோ கந்தர்வ கன்னிகையோ கம்பனவன் உவமையோ  கங்குல் குழலழகியோ கலையான ஓவியமோ  மந்திர புன்னகையோ மயக்கிடும் மல்லிகையோ மாம்பழ கன்னங்களோ  மங்காத அகல் விளக்கோ குந்தவை பிராட்டியார்  விந்தைபல காட்டினார் வந்தென்னை சீராட்டினார் எந்தனுடல் கூறாக்கினார்  ❤❤❤

இயற்கை என் காதலி 1

Image
 புலர்ந்திடும் காலையில் 🌅 எழுந்திடும் சூரியன் 🌞 எறிந்திடும் கதிரென்னை எழுப்பியதே❤ மலர்ந்திடும் பூக்களும்🌻🌺 நுழைந்திடும் வண்டுகள் 🐝🐞 இசைப்பது கேட்டுத் தலையாட்டியதே🌹 இயற்கை அன்னை🧚‍♀️ படைப்பில் காணும்👁️👁️ காட்சி எங்கும் இசையை கேள்🌄🏞️👂 பாயும் அருவி 🏞️ தாவும் தவளை🐸 தூவும் மழையில் யாவும் இசைகேள்🌦️ சலசலக்கும் நீரோடை🏞️ குதூகளிக்கும் மீனினங்கள்🐟🐠 கலகலக்கும் தென்னோலை🌴🌴 கிளியினொலி கேள்🦜🦜 சரசரக்கும் மானினங்கள் 🦌🦌 இசையெழுப்பும் குயிலினங்கள்🐦🐦 இசைக்காடும் மயிலினங்கள் 🦚🦚புல்லினங்கள் பார் 🌱🌱 இயற்கையின் அழகுடன் 🏞️🌺🦋 இணைந்திடும் இசைதனை🎼🎵🎶 இதுவரை எவரும் ரசித்ததுண்டா❤❤ இறைவனின் படைப்பினில் 🙏❤ இயற்கையின் காட்சியில்🏞️இசைப்பதும் அசைவதும் யாவுமழகே❤ 🌴🌳🌷🍂🦥🦌🦜🦚🐝🦋🐦 இணுவை நித்தியதாஸ்  

இவானா

Image
இவானா இவள் தானா இளமானா வியந்தேனா  இதழ் தேனா இசைந்தேனா  இரவோ இவள் குழல்தானா இமைகள் மூட மறந்தேனா  இதயம் நானும் இழந்தேனா ❤

நினைவுகள்

Image
தூங்காத இரவுகள் துடிக்கின்ற இருதயம்  நீங்காத நினைவுகள் நீடிக்கும் கனவுகள் ஆங்காங்கே அவள் முகம் அடிக்கடி அழுகைகள் ஏங்காத பொழுதில்லை எண்ணாத நாளில்லை

தனிமை என் காதலி

Image
 தனிமை என் காதலி❤  கூடவே இருக்கின்றாய் கூட்டி எங்கோ போகின்றாய் வாடி நானும் இருக்கையிலே  வந்தென்னை அணைக்கின்றாய்  என்னோடு நடக்கின்றாய் என்சோகம் கேட்கின்றாய் எண்ணியதும் வருகின்றாய் எந்நாளும் அணைக்கின்றாய்  இதயத்தோடு பேசுகின்றாய்  இசையாக தாலாட்டுகிறாய்  இரவுகளில் இனிக்கின்றாய்  இமை மூட மறுக்கின்றேன் கண்ணோரம் இருக்கின்றாய்  கண்ணீரைத் துடைக்கின்றாய் நெஞ்சோரம்  இருக்கின்றாய் நெடுநேரம் அணைக்கின்றாய்  கூட்டத்தில் இருக்கையிலும் உன்னையே தேடுகின்றேன் கூப்பிட்டதும் வருகின்றாய் கட்டியென்னை அணைக்கின்றாய்  உறவுகள் வரும் போகும்  உணர்வதில் உயிர் வேகும் உடன் யாரும் வருவதில்லை உள்ளமது உடைந்தது போதும் உன்னையே விரும்புகின்றேன் எந்நேரமும் வேண்டுகின்றேன் என்னை விட்டுப் போகாதே  என் இனிய தனிமையே ❤

மார் மீது தூங்கும் மார்கழியே

Image
மார்கழியில் மனம் களிக்கும் ஆர்கலியில் ஆதவன் குளிக்கும் போர்வைக்குள் பனி படுக்கும் சோர்வுதனை அது கொடுக்கும்  ஊர் தொலைவில் மணி ஒலிக்கும் திருவெம்பாவை துயில் எழுப்பும் பேர்வழிக்கு தானும் இருப்பதாய்  கூரைச் சேவல் பின்னே எழுப்பும்  கீற்றொளியை சூரியன் பரப்ப நர்த்தனம் ஆடிடும் மயிலினங்கள் தீர்த்தமாடி முடிக்கும் புல்வெளிகள் தீர்ந்து போய்விடும் பனித்துளிகள்  வாரிக்கொண்டை போட்ட பெண்டிர் வாசல் கோலம் போட்டிடுவார் நேரமாச்சு தோட்டத்துக்கு  சாறிப் பாத்தியாக்கச் சொல்வர்  நீர் குளிரும் என்ற பின்னும் நீள் துயிலை குழப்பிடுவர் மூரி மட்டை ஓலை சிரட்டையென மூட்டி உலை வைத்து தருவர்  மாரி முடிந்ததை மறந்துவிட்டு  மார்கழியை கொண்டாடுது மழைத்துளி  பார் வெளியில் வந்து மனிதா  வாரி அணைக்க சொல்லுது இயற்கை மார்கழியை கொண்டாடுவோம் இணுவை நித்தியதாஸ்

கண்ணம்மா என் காதலி 2

Image
ஒளியினில் ஒரு தேவதை ஒளிர்ந்தாள் என் தாரகை விழிகளில் ஒருவித போதை விழித்தேன் இவள் என் காரிகை  சிரித்தாள் அழகிய தேவதை புரிந்தேன் என் உடல் தேய்வதை  மகிழ்ந்தேன் இதயம் நோவதை மறுப்பேன் எனைவிட்டு போவதை  வானவில் புருவம் வளைத்தாள் நானதில் முழுதும் தொலைத்தேன் பாணத்தை விழியால் தொடுத்தாள் நாணத்தில் தலை குனிந்தாள்  பால்வெளியில் நீந்தும் இரு கோள்கள் பார்த்தேன் அது அவள் கண்மணிகள் புல்வெளி கண்ட ஆட்டுக்குட்டியாய் பூவையிவளைக் கண்டு மனம் கூத்தாடுதே  ❤🔥❤ இணுவை_நித்தியதாஸ்

கண்ணம்மா என் காதலி 1

Image
கலைந்தாடும் கூந்தல் அழகு கனிவான பேச்சு அழகு  கலையான அழகை கண்டு கவிழ்ந்தேனே காதல் கொண்டு தொலைத்தேனே இதயம் ஒன்று தொடுத்தாயே காதல் அம்பு இளைத்தேனே நானும் இன்று  இளமானே உன்னைக் கண்டு  முழைத்ததே சிறகு ரெண்டு மிதந்தேனே காற்றில் நின்று நுழைந்தாயே விழியின் வழியே நகைந்தாயே புன்னகை மொழியே  மலைத்தேனே வனப்புக் கண்டு மறுப்பேனா வேண்டாம் என்று  மலைத்தேனை இதழில் கொண்டாய்  மாறிவிடவா நானும் வண்டாய் திளைப்பாயா அன்பில் வென்று துடித்தேனே ஏங்கி நின்று  அழைப்பாயா அன்பே என்று அணைப்பாயா பக்கம் வந்து அலைந்தேனே உந்தன் பின்னே  அவிழ்ப்பாயா மௌனம் முன்னே  பிழைப்பேனே நானும் பெண்ணே  பிடிவாதம் வேண்டாம் கண்ணே  ❤🔥❤ இணுவை நித்தியதாஸ் 

அப்பாவின் சைக்கிளின் கோபம்

Image
அப்பற்றை சைக்கிள் அருமந்த சைக்கிள் குப்பைக்குள் புரண்டு கோடிக்குள் கிடந்தது  நாப்பது வருச காலம்  நான்தானே சுமந்தனான் இப்பத்தான் தெரியுதோ என்று ஏக்கத்துடன் கேட்டது அப்பரோடு இருந்த காலம் அது என்ர வசந்தகாலம்  எப்படியெல்லாம் வச்சிருந்தார் எங்கெல்லாமோ சுத்தி திரிஞ்சம்  கொப்பரும் கொம்மாவும் கல்யாணம் கட்டின நேரத்தில எப்பவும் எல்லா இடமும் என்னைதான் கூட்டிப் போவினம் செக்கன்ட் சோ சினிமாவுக்கும் சாமத்தில் போய் வருவம்  சொக்கன் கடை தேத்தண்ணிக்கும் சட்டென்று போய் வருவம் வாட்டப்பம் இழுப்பதுவும் வாழைக்குழை கட்டுவதும் தோட்டம் துறவு எல்லாம் தினம் தினம் போய் வருவம் மூட்டை சுமப்பதற்கும் மரக்கறி வாங்குவதற்கும் தொட்டதுக்கெல்லாம் வந்தேனே  தொட்ட என்னை விட்டதுமேன் கண்ணே நீ பிறந்த பின்னே  சின்னக் கரியர் பூட்டி உன்னைச் சுமந்த பொழுதுகள் இன்னும் மறக்கவில்லையடா சின்னவன் நீயும்  சில்லுக்குள் கால் கொடுத்து கண்ணீர்விட்டு அழுதது தாங்காமல் என்னை நானே தண்டித்தேன் எப்படி உனக்கு தெரியும் தட்டித் தட்டி ஓட பழகியதும் தடுமாறிக் கீழே விழுந்ததுவும் வெட்டி வெட்டி ஓடிக்காட்டி  பெட்டைகளுக...

தைத்திருநாள்

Image
தை மகளே வருக தை மகள் வருவதை தங்க மகன் எழுவதை கண்டு மலர் விரிவதை வண்டினம் உண்டு செரிப்பதை  தரணியது செழிப்பதை தமிழர் வீரம் சிறப்பதை திட்டங்கள் புதிதாய் வகுப்பதை பட்டங்கள் பெரிதாய் பறப்பதை  பொங்கிச் சரிப்பதை  பொங்கி மகிழ்வதை  கூடிக் களிப்பதை குதூகலித்து இருப்பதை  உழவர்தம் திருநாளிதை உலகத்தமிழர் பெருநாளிதை காத்திருந்து வரும் நாளிதை காலம் கனிந்து தரும் நாளிதை  வருவதை தருவதை ஏற்றிடுவோம்  மனமது மகிழ்வதை உணர்ந்திடுவோம்  இத்தனை தை ஒரு சேரும் நாளிதை இன்முகத்துடன் வரவேற்றிடுவோம்

மழைக்கால இரவுகள் 🌝🌧️

Image
 மழைக்கால இரவுகள் 🌝🌧️ மாரியில் மனம் மகிழும் மாபெரும் விழா நிகழும்  காரிருள் உரசிக் கொள்ளும்  பேரிகை போல் முழக்கம் எழும்  மண்ணினை மழைநீர் தழுவும்  வெண்ணிலா வெக்கத்தில் ஒளியும்  மின்மினிகள் ஒளியால் அலங்கரிக்கும் மின்னலும் இடையே கண்சிமிட்டும் கெஞ்சிரா வாசிக்கும் தவளைகள்- விளக்கை  கொஞ்சி மடியும் மழைப்பூச்சிகள் நஞ்சிடும் நாக பாம்பாய் - காற்றில்  நர்த்தனமாடும் கமுக மரங்கள்  காதருகே சுருதி இசைக்கும் நுளம்புகள்  கூடவே தாளம் போடும் வெட்டுக்கிளி  கூதல் போக்க அடுப்பில் தூங்கும் பூனைகள் காதல் ஏக்கத்தில் சமிக்ஞை காட்டும் பல்லிகள்   அழைக்காமல் வரும் அட்டைகள் கலைத்தாலும் வரும் விட்டில்கள் தனியாக வரும் நத்தைகள்  அணிவகுத்து வரும் எறும்புகள் மழைக் கூதல் தாங்கா மரங்கள்  மரக் கிளை உரசி உஷ்ணம் உணரும் கிளிகள் கிளையை அலங்கரிக்கும்  கிளை ஒடிய கிளி ஒப்பாரி வைக்கும்  காய்கள் போல் வௌவால்கள் கிளையில் தொங்கும் நாய்கள் பல ஊளையிட்டு ஊரைக் கூட்டும் வாய்கள் இருக்கெண்டு ஆந்தைகள் அலறும் பேய்கள் உலவுவது போல் எண்ணமும் தோன்றும்  சில்...

மறக்குமா யாழ்ப்பாண புட்டு

Image
 பீசாவில் என்ன சுவை கண்டீர்   காசில்லாதவன் புசிக்கும் புட்டே உயர்வென்பேன்  பேசும் பொருளானதின்று பேஸ்புக்கில் நாசாவும் இறங்கிவிடும் நாளை ஆராய்ச்சியில் உரலில் இடித்த சம்பலை  தாழித்து பின்  குழலில் அவித்த புட்டோடு புசிக்கலாம்  இரவில் ஏதும் மிச்சம் இருந்தால்  பகலில் பழங்கறியோடு உண்ணலாம்  மதியம் சமைத்த ஆட்டிறைச்சி  அதையும் இரவில் சூடாக்கி  சதையும் எலும்பும் மிச்சம் விடாமல்  இதிலும் இறுதியில் புட்டே வெல்லும்  நண்டுக்கறியோடு புட்டு உண்டால்  ஒன்றிரண்டு தட்டு இறங்கும்  கணவாய் கறியோடு உண்டால்  ஒருவாயும் மிச்சம் இராது  அவித்த வெள்ளை மாப்புட்டோடு  வதக்கலில் உருளைக்கிழங்கு போதும்  பிரட்டலில் கத்தரிக்காய் போதும்  பொரித்தலில் மோர்மிளகாய் சுண்டங்காய் நாலு வகை கறி எதுக்கு  நன்று பழுத்த வாழைப்பழம் போதும்  நான்கு துண்டு மாம்பழமும் போதும்  நாவில் எச்சிலூறும் பலாச்சுளை போதும்  வேறு என்ன சொல்வேன்  யார் வந்து கேட்டாலும்  புட்டு புட்டு உன் திருவாயால்  கட்டு கட்டு ஒரு கட்டு கட்ட...

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Image
 யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்  நல்லவேளை தப்பிவிட்டேன் நானும் தான் மாட்டியிருப்பேன் ஏனிந்த ஆர்ப்பாட்டம் எதற்கிந்த போராட்டம்  காலிமுகத்திடல் போல பெருங்கூட்டம் தாலி கட்டினதுதான் காரணமாம்  தாமதம் ஆனதனால்  ஆர்ப்பாட்டமாம்  வீட்டுக்காரியை எதிர்த்து போராட்டமாம்  வேலைக்கு விடுமுறை எடுத்தவராம்  காலையில் நேரத்துக்கே வந்தவராம் வேளைக்கு வீட்டை போற எண்ணமில்லையாம்  நாளைக்கு வருசம் எண்டதையே மறந்திட்டாளாம்  வெறும் வயித்தோடை வந்தவராம் வயிறு வெந்து புண்ணாச்சுதாம் கயிறு ஒன்று கட்டினதாலதானாம் கால் கடுக்க நிக்கிறாராம்  புலம்புகிறார் புதுக்கணவர்  பத்து வருசமாக குடும்பம் நடத்திறன்  பெத்ததெல்லாம் கூட்டி வருவன்  பெட்டி படுக்கையோடதான் வருவன்  புது உடுப்பு எடுப்பதெண்டால் சுற்றுலா போல் தான் வருவேன்  பக்குவமாக சொன்னார் பழைய கணவர்  துணிவோடு இருந்துவிட்டால்  துணையேதும் தேவையில்லை  தனியாக இருந்துவிட்டால் துணிமணி தேவையில்லை  நல்லவேளை தப்பிவிட்டேன் நானும் தான் மாட்டியிருப்பேன்

வாத்தியாரின் வாய்ப்புளிப்பு

Image
 வாத்தியாரின் வாய்ப்புளிப்பு  வாய் புளிக்குதெண்டு புலம்பின வாத்தியாரை நோய் வந்து எலும்பு தேஞ்சு நொண்டி நடப்பவரை வெத்தில போட்டா நல்லதெண்டு  போய்வாரும் சந்தைக்கு புளிப்பு எடுபடும் எண்டு பாயில படுக்க விடாம பாஞ்சு விழுந்து  மூஞ்சூறு போல் சினத்து முடிச்சை அவிட்டு  பத்து ரூபாய் மட்டும் கொடுத்து வெத்திலை மட்டும் வேண்டி போடு  பத்திரமா போட்டுவா எண்டு  பத்து தடவை கத்திச் சொல்லி மிச்ச காசை கொண்டு வா மினக்கடாம வேளைக்கு வா எண்டு வழியனுப்பி வச்சார் வாத்தியாற்ற மனிசி  போன மனுஷன் உள்ள போய் கடை தேடி சுழண்டடிச்சு தலை சுத்தி  தூணை பிடிச்சபடியே இருந்தபடி  போன முறை வந்த போல எதுவும் இல்லை இடம் மாறி வந்திட்டனோ இஞ்சை ஆரையன் கேப்பமோ எண்டு புலம்பி  இடம் கேட்டு கடை பிடிச்சு கை நீட்டினார் பத்து ரூபாய்க்கு சீவல் வெத்திலை எண்டே  வெறும் வெத்திலை மட்டும் குடுத்துவிட்டு  வெறுப்பேத்த வேண்டாம் வெளியால போங்கையா வேற வேலை பாருங்கையா கடைக்காரன் சொல்லவே  வாத்தியார் குழம்பிவிட்டார் கொள்ளையடிப்பதுமேன் கொல்லையில போவாரே குறுக்கால போவாரே துலைவாரே  ஒரு வெத்த...

பெற்றோல் அடித்துப்பார்

Image
 பெற்றோல் அடித்துப்பார்..! பெற்றோல் அடித்துப்பார் செற்றிலேயே செற்றிலாகிவிடுவாய் பெற்றோல் கிடைத்துவிட்டால்  பெருமையாய் உணர்வாய்  விற்பனை முகவர்கள்  சுற்றிலும் சுழல்வதை காண்பாய்  கற்றோர் கல்லாதோர் எல்லாம் சமம் என்று உணர்வாய்  பெற்றோல் அடித்துப்பார்..! தூக்கம் தொலைப்பாய் மழையிலும் நனைவாய்  மூன்று நாளானாலும் பல் துலக்க மறப்பாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமிடையில்  ஈரம் இல்லாமல் போவதை உணர்வாய் ராத்திரி பகல் தெரியாது காத்திருப்பாய் மணிக்கணக்காய் பெற்றோல் அடித்துப்பார்..! காட்டுக்கு மட்டும் என்பார் சிலர்  QR மட்டும் என்பார்  ஒரு சிலர்  QR உம் காட்டும் என்பார் சிலர் கேட்டுக் கேட்டே சலித்துப் போவாய் காக்கை மட்டுமா கறுப்பு காய்ந்த நானும் கறுப்பென்பாய் நாக்கை வெளியில் தள்ளிக்கொண்டே நாயைப் போல தள்ளிச்செல்வாய்  பெற்றோல் அடித்துப்பார்..! இடைச்செருகல்கள்  இடம்பெறும் கடை வாசல் எல்லாம் அடைபடும் கடைக்காரன் குழம்பியடிப்பான் கடைசியில் மேலாலே ஏறிக் குதிப்பான் இரண்டங்குல இடைவெளியிலும் இன்னொரு பைக் நுழைவதை பார்ப்பாய் இடிபட்ட உடனே கண்ணாடி நொரு...