தனிமை என் காதலி

 தனிமை என் காதலி❤ 


கூடவே இருக்கின்றாய்

கூட்டி எங்கோ போகின்றாய்

வாடி நானும் இருக்கையிலே 

வந்தென்னை அணைக்கின்றாய் 


என்னோடு நடக்கின்றாய்

என்சோகம் கேட்கின்றாய்

எண்ணியதும் வருகின்றாய்

எந்நாளும் அணைக்கின்றாய் 


இதயத்தோடு பேசுகின்றாய் 

இசையாக தாலாட்டுகிறாய் 

இரவுகளில் இனிக்கின்றாய் 

இமை மூட மறுக்கின்றேன்


கண்ணோரம் இருக்கின்றாய் 

கண்ணீரைத் துடைக்கின்றாய்

நெஞ்சோரம்  இருக்கின்றாய்

நெடுநேரம் அணைக்கின்றாய் 


கூட்டத்தில் இருக்கையிலும்

உன்னையே தேடுகின்றேன்

கூப்பிட்டதும் வருகின்றாய்

கட்டியென்னை அணைக்கின்றாய் 


உறவுகள் வரும் போகும் 

உணர்வதில் உயிர் வேகும்

உடன் யாரும் வருவதில்லை

உள்ளமது உடைந்தது போதும்


உன்னையே விரும்புகின்றேன்

எந்நேரமும் வேண்டுகின்றேன்

என்னை விட்டுப் போகாதே 

என் இனிய தனிமையே ❤




Comments