யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

 யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் 


நல்லவேளை தப்பிவிட்டேன்

நானும் தான் மாட்டியிருப்பேன்

ஏனிந்த ஆர்ப்பாட்டம்

எதற்கிந்த போராட்டம் 


காலிமுகத்திடல் போல பெருங்கூட்டம்

தாலி கட்டினதுதான் காரணமாம் 

தாமதம் ஆனதனால்  ஆர்ப்பாட்டமாம் 

வீட்டுக்காரியை எதிர்த்து போராட்டமாம் 


வேலைக்கு விடுமுறை எடுத்தவராம் 

காலையில் நேரத்துக்கே வந்தவராம்

வேளைக்கு வீட்டை போற எண்ணமில்லையாம் 

நாளைக்கு வருசம் எண்டதையே மறந்திட்டாளாம் 


வெறும் வயித்தோடை வந்தவராம்

வயிறு வெந்து புண்ணாச்சுதாம்

கயிறு ஒன்று கட்டினதாலதானாம்

கால் கடுக்க நிக்கிறாராம் 


புலம்புகிறார் புதுக்கணவர் 


பத்து வருசமாக குடும்பம் நடத்திறன் 

பெத்ததெல்லாம் கூட்டி வருவன் 

பெட்டி படுக்கையோடதான் வருவன் 

புது உடுப்பு எடுப்பதெண்டால்

சுற்றுலா போல் தான் வருவேன் 


பக்குவமாக சொன்னார் பழைய கணவர் 


துணிவோடு இருந்துவிட்டால் 

துணையேதும் தேவையில்லை 

தனியாக இருந்துவிட்டால்

துணிமணி தேவையில்லை 


நல்லவேளை தப்பிவிட்டேன்

நானும் தான் மாட்டியிருப்பேன்


Comments