தைத்திருநாள்

தை மகளே வருக


தை மகள் வருவதை

தங்க மகன் எழுவதை

கண்டு மலர் விரிவதை

வண்டினம் உண்டு செரிப்பதை 


தரணியது செழிப்பதை

தமிழர் வீரம் சிறப்பதை

திட்டங்கள் புதிதாய் வகுப்பதை

பட்டங்கள் பெரிதாய் பறப்பதை 


பொங்கிச் சரிப்பதை 

பொங்கி மகிழ்வதை 

கூடிக் களிப்பதை

குதூகலித்து இருப்பதை 


உழவர்தம் திருநாளிதை

உலகத்தமிழர் பெருநாளிதை

காத்திருந்து வரும் நாளிதை

காலம் கனிந்து தரும் நாளிதை 


வருவதை தருவதை ஏற்றிடுவோம் 

மனமது மகிழ்வதை உணர்ந்திடுவோம் 

இத்தனை தை ஒரு சேரும் நாளிதை

இன்முகத்துடன் வரவேற்றிடுவோம்




Comments