இணுவைக் கந்தன் திருப்புகழ் 🙏
இணுவைக் கந்தன் திருப்புகழ் 🙏
அழகு மிளிரும் நிலவு ஒளிரும் வதனம் உடைய குமரோனே!
களிறு வதனம் சுளகு செவிகள் உடைய கபிலருக் கிளையோனே!
அலைகள் உயரும் பெரிய கடலில் துயிலும் அரியின் மருகோனே!
மலையில் உறையும் குறத்தி மனத்தில் உறையும் அழகு முருகோனே!
மரத்தில் ஒளிந்த அசுரன் உடலை தறிக்க அயிலை விடும்வேலா!
பரமன் மகனே பரந்த புயனே விரைந்து மயிலில் வருவாயே!
அருண கிரிநின் புகழைப் பாட அடிகள் எடுத்து கொடுத்தாயே!
வரத்தை அதுபோல் எனக்கு அளித்துன் புகழைப் பாட அருள்வாயே!
அணுவில் கலந்து அகிலம் அளந்து அமரர் துயரை துடைத்தோனே!
இணுவில் மண்ணில் அமர்ந்து அருளும் நொச்சியொல்லைப் பெருமாளே!
ஓம் சரவணபவ 🙏
இணுவைக் கந்தன் சரணம் 🙏

Comments
Post a Comment