தாடி வளர்த்து பார்
தாடி வளர்த்துப்பார்
சன்னதி கைதடி
இரண்டில் ஒன்று நிச்சயம் 😁😁😁
தாடி வளர்த்து பார்
சன்னியாசி போல் உணர்வாய்
உன் முகம் உனக்கே மறந்து போகும்
உன் விம்பம் இதுவல்ல
கண்ணாடியும் குழம்பும்
சலூன் செலவு குறையும்
சம்போ செலவு அதிகமாகும்
நொடிக்கொரு முறை வருடுவாய்
முப்பது முறை முகம் கழுவுவாய்
மாஸ்க் போட்டு திரிந்தாலும்
கடன்காரன் கண்டுபிடிப்பான்
கன்னிப்பெண்கள் பார்த்து ரசித்த முகத்தை பல முதிர்கன்னிகள் பார்த்து ரசிப்பர்
தாடி வளர்த்து பார்
காக்கை மட்டுமே உன்னை கவனிக்கும்
உன்னைசுற்றி அது வட்டமிடும்
காணாமல் போன தன் கூட்டை
நீ களவாடி விட்டதாக புலம்பும்
தாடியின் இடைவெளிகளில் உருவமில்லா ஏதோ ஒன்று ஊர்வதுபோல் உணர்வாய்
தாடிக்கொரு சீப்பு தலைக்கொரு சீப்பு வைப்பாய்
தாடிக்குள் சிக்கியே சீப்பும் உடையும்
தாடி வளர்த்து பார்
ஆரென்றே தெரியாதவரெல்லாம் அறுபத்தெட்டு கேள்வி கேட்பார்
என்ன விறுத்தம் என்பார்
நல்ல வருத்தம் என்பார்
சாமி என்று சொல்வார்
ஆசாமி என்றும் சொல்வார்
தாடி வளர்த்துப் பார்
தன்னை போல கிளீன் சேவ் எடுத்து திரியும்படி முப்பது வயதாகியும் மீசைகூட முளைக்காத என் நண்பன் சொன்னான்
தாடியாலதான் கல்யாணம் குழம்புகிறது. தாடியை வளி சரிவரும் என்று
இதுவரை எனது குறிப்பே வாங்காத கல்யாண தரகர் சொன்னான்
தாடி வளர்த்துப்பார்
தாடி வளர்த்துப்பார்
சன்னதி கைதடி இரண்டில் ஒன்று நிச்சயம்
Comments
Post a Comment