Posts

Showing posts from May, 2023

அம்மா

 சித்திரை எட்டில் பிறந்தவள்  பத்தரை திங்கள் சுமந்தவள் நித்திரை இழந்து வளர்த்தவள்  உதிரத்தை பாலாய் ஊட்டியவள்  அப்பு ராசா என அழைப்பாள்  அமுதூட்டியே மகிழ்ந்திடுவாள் உண்ட பின் உண்பாள்  உறங்கிய பின் உறங்குவாள்  கடிகாரம் பார்த்திடாள் விடிகாலை எழுந்திடுவாள் நெடுநேரம் வேலை செய்வாள் நொடிகூட ஓயமாட்டாள்  தனக்கென கனவேதும் கொள்ளாள்  எம் கனவை தன் கனவாய் சுமப்பாள் சாமி நீ என்பேன் சாமி நீ இருக்கும்  சமையலறையே கோவில் என்பேன்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤🎂🎊🎈

இணுவில் மஞ்சத்தடி

 செம்புரவி மீதினிலே எம்பெருமான் ஆடி வந்தார் அம்பிகை உடனிருக்க அம்பலவனும் ஆடி வந்தான் தும்பிக்கையனும் துணையாக ஐயனுடன் கூட வந்தான் தம்மடியார் துயர் துடைக்க மஞ்சத்தடி முருகன் வந்தான்  #மஞ்சத்தடி_முருகன்_சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி

இணுவில் மஞ்சத்தடி

 செம்புரவி மீதினிலே எம்பெருமான் ஆடி வந்தார் அம்பிகை உடனிருக்க அம்பலவனும் ஆடி வந்தான் தும்பிக்கையனும் துணையாக ஐயனுடன் கூட வந்தான் தம்மடியார் துயர் துடைக்க மஞ்சத்தடி முருகன் வந்தான்  #மஞ்சத்தடி_முருகன்_சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி
Image
 பொன்னை நிகர்த்த நிலவே  என்னை விட்டு ஏனடி நீங்கினையோ தன்னந் தனிமையிலே மயிலே ஏன் என்னைத் தவிக்கவிட்டாய் 💔  ஆங்கு நின் நினைவில் அன்னமே ஏங்கியே அழுகின்றேன்  தீங்கென்ன செய்தேனடி என்னைவிட்டு  நீங்குதல் முறைதானோ 💔 முற்றத்து மல்லிகையே அழகே  நற்றுணை நீயலையோ   பற்றற்று போனியடி உயிரே  சுற்றிலும் வெறுமையடி 💔 காதல் போர்க்களத்தில் சகியே  எதிரணி நீயலையோ சாதல் வேண்டுமெனில் உனக்கே சாதகமாய் தந்திடுவேன் ❤💔 #இணுவை_நித்தியதாஸ்  #சின்னஞ்சிறு_நிலவே_பிரதிபலிப்பு

இணுவில் மஞ்சத்தடி

 கருணை மழை பொழிய     கந்தன் வந்தான் வீதியிலே அருகருகாய் அழகு அன்னை                                 அமர்ந்திருக்க பவனி வந்தான் அருணகிரி பாடி வந்தான்        அகிலமெங்கும் திருப்புகழை திருவடி தொழுது நின்றோம்      முருகா சரணம் என்றோம்  மஞ்சத்தடி முருகா சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி

சிவகாமி அம்மன்

 சித்திரை நிலவு முகம் சிற்றிடை அழகுடையாள்  சித்திரப் பூவிழியாள் சிற்றாடை உடுத்தி வந்தாள் கொத்தாக பூவணிந்தாள் கற்றைக் குழல் அதன்மேல்  இத்துணை அழகு கொண்டால் எங்ஙனம் வர்ணிப்பேன் எத்துணை துயர் வரினும் எம்துணையாய் அருகிருப்பாள்  நித்திலப் புன்னகையாள் நித்தமெமைக் காத்திடுவாள்  ஓம் சிவகாம சுந்தரியே போற்றி 🙏❤🙏 Inuvil Sivakami Amman Kovil

மஞ்சத்தடி

 ஒளியாக என்னுள் வளர்கின்ற இறையே அழியாத வாழ்வை தருவோனே  விழியாலே கருணை பொழிகின்ற முருகா வழியெங்கும் துணையாய் வருவோனே கிளியான அருண கிரிநாதன் தோளில் அழகாக அமர்ந்து வரும் நாதா  துளியேனும் உன்னை நினையாமல் நானும் எளிதாக மறந்து இருப்பேனோ மஞ்சத்தடி முருகா சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி

இணுவைக் கந்தன் திருப்புகழ் 🙏

 இணுவைக் கந்தன் திருப்புகழ் 🙏 அழகு மிளிரும் நிலவு ஒளிரும் வதனம் உடைய குமரோனே! களிறு வதனம் சுளகு செவிகள்  உடைய கபிலருக் கிளையோனே! அலைகள் உயரும்  பெரிய கடலில் துயிலும் அரியின் மருகோனே!  மலையில் உறையும் குறத்தி மனத்தில் உறையும்  அழகு முருகோனே!  மரத்தில் ஒளிந்த அசுரன் உடலை தறிக்க அயிலை விடும்வேலா! பரமன் மகனே பரந்த புயனே விரைந்து மயிலில் வருவாயே!  அருண கிரிநின் புகழைப் பாட  அடிகள் எடுத்து கொடுத்தாயே! வரத்தை அதுபோல் எனக்கு அளித்துன் புகழைப் பாட அருள்வாயே! அணுவில் கலந்து அகிலம் அளந்து அமரர் துயரை துடைத்தோனே! இணுவில் மண்ணில் அமர்ந்து அருளும் நொச்சியொல்லைப் பெருமாளே! ஓம் சரவணபவ 🙏 இணுவைக் கந்தன் சரணம் 🙏 #இணுவை_நித்தியதாஸ்_இணுவைக்_கந்தன் இணுவில் கந்தசுவாமி கோவில் நொச்சியோலைக்கந்தன் நொச்சியோலைக்கந்தன் இணுவில் Nallur Kandaswamy Temple  📸 Pirathapan Shine
Image
நல்லதுக்கு காலம் இல்லை நன்மை செய்ய ஆளும் இல்லை  எல்லாத்திலும் அரசியல் இதை சொன்னா என்னை எதிர்ப்பியள்  பொல்லாத அரசியல் இது புரியாத அரசியல் தொட்டத்துக்கும் அரசியல் கெட்டதிந்த அரசியல்  கண்டதிலும் அரசியல் எண்டு சொன்னா சிரிப்பியள்  காலகாலமாய் நடக்குது  கலிகாலம் புரிவியள் உண்ணும் உணவில் அரசியல் மண்ணைக் காக்க அரசியல்  உரிமைக்கான அரசியல்  இல்லை இது கதிரைக்கான அரசியல் கதவடைப்பு போராட்டம் என்பார் அதில் தமக்கு இலாபம் என்பார்  கடைக்காரனோ நஷ்டம் என்பான் கண்டுக்கவே மாட்டார் எவரும்  போராட்டத்தின் நோக்கத்தை மறந்து போராட்டம் தொடங்கியது யாரால என போராடுவர்  பாராளுமன்றத்தில் காரசாரமாக பேசுவார் இராப்போசனத்தில் காரம் புளி என்று குலவுவார்  தீபாவளிக்கு தீர்வு என்பார் வாழ்த்து சொல்வதையே மறந்திடுவார் பொங்கி எழுவதையே பொழுதாக கொள்வார்  பொங்கலை கொண்டாட மறந்திடுவார்  ஆரம்பத்தில் எதையும் கண்டுக்கார்  பாராமுகமாய் இருந்திடுவார்  ஆராதனைகள் ஆரம்பித்த பின் ஆர்ப்பாட்டங்கள் செய்திடுவார் நல்லதுக்கு காலம் இல்லை நன்மை செய்ய ஆளும் இல்லை  எல்லாத்திலும...

இணுவில் மஞ்சத்தடி

 பண் கொழிக்கும் இணுவில் அமர்ந்தவன் மண் செழிக்கும் வகையில் அருள்பவன்  எண்ணியதும் வருபவன் ஏற்றம் தருபவன் அன்னையிருவர் அருகாக அன்னமதன் மீதமர்ந்தான்  மஞ்சத்தடி முருகா சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி

செகராசசேகரப் பிள்ளையார்

 இராசன் செகராசன் ஏகன் ஏகதந்தன் வாசன் இணுவைப்பதி வாசன்  ஈசன் புதல்வன் ஈடிணை இலாதான்  தேசம் தளைத்தோங்க தேரேறிக் காட்சி தந்தான் ஓம்கார ரூபனே போற்றி 🙏 இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் 📸 Apiramimanalan Inuvil
Image
 எது அதுவோ எனை ஈர்த்தது மெதுமெதுவாய் உடல் வேர்த்தது மதிமுகமோ மதுக்குடமோ மயக்கியது நதிசடையோ நக தூரிகையோ இழுத்தது   அதிரசமோ அவள் உதடோ அதில் சுகமோ அதிகதிகமோ புதிதெதுவோ பூவையிவள் மேனியில் ரதி இவளை ரசிப்பதுதான் விதியாமோ விதிக்கும் கட்டளைகள் இவள் கண்களே எதுக்கும் நான் அடி பணிவேனே  கொதிக்கும் என் இதயம் அறிவாளோ விதி இதுதான் என நோவேனோ கதி இவளே என கிடக்கின்றேன்  வதிவிடம் அறிந்தாரும் சொல்வாரோ முதுமை வருமுன் சென்றடைவேனோ மிதிபட்டேனும் நான் சாவேனோ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அழகியே ❤ Trisha Krishnan

இணுவில் மஞ்சத்தடி

 வெள்ளி மயிலேறி முருகன் வந்தான் அள்ளி அருள் பொழிந்தே அழகன் வந்தான் தெள்ளிணுவைப் பதியமர்ந்தோன்  வள்ளி தெய்வயானை உடனாக வந்தான்  ஓம் முருகா 🙏 இணுவில் மஞ்சத்தடி இணுவில் மஞ்சத்தடி அருனகிரிநாதர் சிவசுப்ரமணியர் ஆலயம்
Image
 நிலவும் வானம் உடுத்தி  உலாவி வரக் கண்டேன் அழகு சிலை இவள் மேல்  அலாதி பிரியம் கொண்டேன்  வரவை எதிர்பார்த்திருந்தேன் வரங்கள் வேண்டி நின்றேன்  விரல்கள் அசைத்து நின்றாள் விரதம் கலைத்து நின்றேன் கண்மணி வருகையிலே  கண்ணிமைக்க மறந்தேனே  புன்னகை உதிர்ந்தாளே  புத்துணர்ச்சி பெற்றேனே மல்லிப்பூ கொண்டையிலே மயங்கி நானும் நின்றேனே  அள்ளி முடிந்த கூந்தலிலே  அத்தனை அழகு கண்டேனே  பவ்வியப் பேச்சில் நானும்  பக்குவம் அடைந்தேனே செவ்விதழ் அமிர்தத்தை  எவ்விதம் அடைவேனோ ❤

இணுவில் மஞ்சத்தடி

 அருணகிரிநாத சிவசுப்ரமணியன் கொடியேறினான் கருவில் உயிரான அப்பன் முருகன் கொடியேறினான் அருகில் அமர்ந்து அருளாட்சி புரிவோன் கொடியேறினான் குருவான குமர குருபரன் குறைதீர்க்க கொடியேறினான் ஓம் முருகா 🙏 இணுவில் மஞ்சத்தடி