குந்தவை பிராட்டியார்

 


இந்திரன் மகளோ

இங்கித குணமோ

குந்தவை இவளோ

குன்றாத அழகோ 


சந்திர முகமோ

சங்குக் கழுத்தோ

சுந்தர வனப்பொளிரும்

சுந்தரசோழர் மகளிவளோ


சந்தன உடலோ

சீண்டியது எதுவோ 

செம்பவள வாயழகோ 

செங்கரும்பின் சாறிதழோ


கந்தர்வ கன்னிகையோ

கம்பனவன் உவமையோ 

கங்குல் குழலழகியோ

கலையான ஓவியமோ 


மந்திர புன்னகையோ

மயக்கிடும் மல்லிகையோ

மாம்பழ கன்னங்களோ 

மங்காத அகல் விளக்கோ


குந்தவை பிராட்டியார் 

விந்தைபல காட்டினார்

வந்தென்னை சீராட்டினார்

எந்தனுடல் கூறாக்கினார் 

❤❤❤

Comments