மானம்பூ சிவகாமி அம்மன்

விழாக்கோலம் பூண்டதே இணுவை

வீழாத வீரம் கொண்ட மண்ணிலே 

வில் அம்பு கையில் கொண்டே

வேட்டைக்கு புறப்பட்டாள் எம் அன்னை 


மேள தாள இசையும் முழங்கிட 

நிலாவென ஒளிரும் முகத்துடன் 

உலா வரும் தோரணை கண்டு

தொழாமல் நான் இருப்பேனோ 


பக்திப் பாமாலை பாடிட 

பக்தர் பரவச நிலையில் ஆடிட

மனமும் ஓயாது நினைந்திட

மலங்கள் ஒருங்கே ஒடுங்கிட

நலங்கள் யாவும் தந்திட 

வரங்கள் யாவும் அருளிட

வெள்ளைப் புரவி மீதில் ஏறி

உள்ளமதை குளிர்வித்தாள் 


வானம் இருண்ட நேரத்திலே

வாழை எனும் வன்னியில் ஒளிந்திட்ட

மகிடன் எனும் அசுரனை அழித்திட

முருகனிடம் வேல் வாங்கியே 

மானம்பூ நாளில் மகிடனை அழித்தாளே

மனமதுவும் மகிழ்ச்சியில் திளைத்ததே


ஓம் சக்தி 🙏🙏🙏

Comments