சந்நிதி முருகன் 🙏

தேரேறும் அழகன் தெய்வயானை மணாளன்

காரார் குழலழகி வனக்குறத்தி மனத்துறைந்தோன் 

பாராளும் நாயகன் பார்வதி மைந்தனிவன்

கூரான வேல்கொண்டு சூரனுடன் போர் வென்றோன் 

ஆரா அமுதனிவன் அழகன் முருகனிவன்

தீரா வினையறுப்போன் தாராள அருள்தருவோன்

நாராயணன் மருகன் நான் விரும்பும் முருகன்

தேரேறி அருள் தந்தான் ஆற்றங்கரை வேலனிவன் 


ஓம் சரவணபவ 🙏

சந்நிதி வேலன் துணை 🙏

Comments