சந்நிதி முருகன்🙏
அந்தம் இல்லாதவனே அன்னதான கந்தனே
கந்தக் கடவுளே என்னை காந்தமாய் ஈர்ப்போனே
எந்தன் உள்ளொளியானவனே ஏகாந்தம் தருபவனே
வந்தவினை அறுப்போனே வங்கக்கடல் தாண்டி வந்தோனே
சிந்தையில் நிறைந்தவனே சிங்கார வேலவனே
எந்தையாய் இருப்போனே எந்நிதியும் தருவோனே
உந்தன் சந்நிதி தேடி வந்தேன் உன்மத்தம் ஆகிநின்றேன்
எந்தன் சந்ததியை காத்தருள்வாய் சந்நிதி வேலையா
ஓம் சரவணபவ 🙏
சந்நிதி முருகன் துணை 🙏
✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️
Comments
Post a Comment