நாடகம் பார்க்க வாறீர்

 நான் பார்த்தீபன் பேசுகிறேன் 


நாடகம் பார்க்க வாறீர்

நல்லை வீதியிலே

அரசியல் நாடகம் பார்க்க வாறீர் 


நாடிழந்து வீடிழந்து காடலைந்து 

நாமலைந்த காரணத்தை யாரறிவார் 


நாமிழந்த உயிர்கள் எத்தனையோ ஏனிழந்தோம் காரணத்தை யாரறிவார் 


நாவறண்டு பேச்சிழந்து மூச்சிழந்து

நானிறந்த காரணத்தை யாரறிவார் 


வேல் கொண்டு போர் வென்ற கந்தன் வீதியிலே 

வாய் கொண்டு போர் செய்யும் 

வேடிக்கை காண வாரீர் 


களமாடிய வேளை வேடிக்கை பார்த்தோர் 

நிலைமாறி கைகலப்பு செய்கின்றார் 


நாவறண்டு பேச்சிழந்து மூச்சு முட்டி

நான் போன இடம் வரத் துடிக்கின்றார்


நாடகம் பார்க்க வாறீர்

நல்லை வீதியிலே

அரசியல் நாடகம் பார்க்க வாறீர்

Comments