இசையும் அசைவும் ❤


புலர்ந்திடும் காலையில் 

எழுந்திடும் சூரியன் 

எறிந்திடும் கதிரென்னை எழுப்பியதே


மலர்ந்திடும் பூக்களும்

நுழைந்திடும் வண்டுகள்

இசைப்பது கேட்டுத் தலையாட்டியதே


இயற்கை அன்னை

படைப்பில் காணும்

காட்சி எங்கும் இசையை கேள்


பாயும் அருவி 

தாவும் தவளை

தூவும் மழையில்

யாவும் இசைகேள்


சலசலக்கும் நீரோடை

குதூகளிக்கும் மீனினங்கள்

கலகலக்கும் தென்னோலை

கிளியினொலி கேள்


சரசரக்கும் மானினங்கள்

 இசையெழுப்பும் குயிலினங்கள்

 இசைக்காடும் மயிலினங்கள் 

புல்லினங்கள் பார் 


இயற்கையின் அழகுடன் 

இணைந்திடும் இசைதனை

இதுவரை எவரும் ரசித்ததுண்டா


இறைவனின் படைப்பினில்

 இயற்கையின் காட்சியில்

இசைப்பதும் அசைவதும் யாவுமழகே

🌴🌳🌷🍂🦥🦌🦜🦚🐝🦋🐦

#இயற்கை_என்_காதலி

இணுவை நித்தியதாஸ்


Comments