இணுவை_சிவகாமி_அம்மன் தங்கரத பவனி

 தங்க ரதம் மீதிலேறும் 

எங்கள் சிவகாமி அம்மன்

மிளிரும் அழகினில்

மனமும் மயங்கிடுமே 


திங்களும் கீழிறங்கியதே 

அங்க ஒளி வாங்கிடவோ 

நின்பதமே தொழுது நின்றேன்

நிறை கருணை தந்திடம்மா 


கங்குல் குழல் பொங்கும் எழில்

கொண்ட சிவகாமி அம்மை

வண்டு தங்கும் மலர்க் கூந்தல்

வண்ணம் பச்சை உடையுடுத்தி 


தெங்கு பனை கமுகு வாழை

ஓங்கி வளர் இணுவையில் 

சிந்துகின்ற அருளோடு

தங்கரத மேறி வாறாள்

 

🙏🙏🙏

#இணுவை_சிவகாமி_அம்மன்

தங்கரத பவனி

Comments