இயற்கை என் காதலி 1


 புலர்ந்திடும் காலையில் 🌅

எழுந்திடும் சூரியன் 🌞

எறிந்திடும் கதிரென்னை எழுப்பியதே❤


மலர்ந்திடும் பூக்களும்🌻🌺

நுழைந்திடும் வண்டுகள் 🐝🐞

இசைப்பது கேட்டுத் தலையாட்டியதே🌹


இயற்கை அன்னை🧚‍♀️

படைப்பில் காணும்👁️👁️

காட்சி எங்கும் இசையை கேள்🌄🏞️👂


பாயும் அருவி 🏞️

தாவும் தவளை🐸

தூவும் மழையில் யாவும் இசைகேள்🌦️


சலசலக்கும் நீரோடை🏞️

குதூகளிக்கும் மீனினங்கள்🐟🐠

கலகலக்கும் தென்னோலை🌴🌴

கிளியினொலி கேள்🦜🦜


சரசரக்கும் மானினங்கள் 🦌🦌 இசையெழுப்பும் குயிலினங்கள்🐦🐦 இசைக்காடும் மயிலினங்கள் 🦚🦚புல்லினங்கள் பார் 🌱🌱


இயற்கையின் அழகுடன் 🏞️🌺🦋

இணைந்திடும் இசைதனை🎼🎵🎶

இதுவரை எவரும் ரசித்ததுண்டா❤❤


இறைவனின் படைப்பினில் 🙏❤ இயற்கையின் காட்சியில்🏞️இசைப்பதும் அசைவதும் யாவுமழகே❤

🌴🌳🌷🍂🦥🦌🦜🦚🐝🦋🐦

இணுவை நித்தியதாஸ்

 


Comments