கருணாகர பிள்ளையார் தேர் 🙏

 சீர் இணுவைப்பதி எல்லை அமர்ந்தாய் ஊர் காக்கும் கருணாகரனே 

தேர் ஏறி வந்து காட்சி தந்தாய்

பார் போற்றும் பதியானவனே 

ஏர் பிடிப்போர்க்கு துணையானாய்

ஏரம்ப மூர்த்தி ஆனவனே 

ஊர் கூடி வடம்பிடித்தோம்

உன்னடி தொழுதுநின்றோம் 


கருணைக் கடலே கருணாகர கடவுளே 

காருண்ய நாதனே காக்கும் கடவுளே 

முருகனவன் சோதரனே மூஞ்சூறு வாகனனே

திருமாலின் மருகோனே பெருவாழ்வு தருவாயே


கருணாகர பிள்ளையார் துணை 🙏


Comments