Posts

Showing posts from February, 2023

முருகன் ❤ வள்ளி காதல் முன்மொழிவு [1]

 முருகன் ❤ வள்ளி காதல் முன்மொழிவு [1] வனத்துறைந்திட்ட வேடன் யான் தினம் மான் வேட்டைக்கு வருபவன்  எனைக் கவர்ந்திட்ட இளமானை கண்டேன் எனை அறியாமல் காதலும் கொண்டேன்  கணை தொடுத்திட்ட இரு கண்கள் கண்டேன் கணப்பொழுதினில் சரிந்தே வீழ்ந்தேன்  மனத்துறைந்திட்ட இளமானே நில்லு  மனம் திறந்து உந்தன் நாமம் சொல்லு ❤❤❤ ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #முருகன்_வள்ளி_காதல் #நித்தியதாஸ்

பெற்றோல் பரிதாபங்கள்

 இரவுகளும் நீளுதே உன் நினைவுகளும் வாட்டுதே! வரவினை எதிர்பார்த்தே என் வாலிபம் தேயுதே! குரங்கினை போலே மனம் குழம்பித் தெளியுதே! நிரம்பாதா என் தாங்கியும் உன்னிடம் வாங்கியே! வரிசையில் நின்றே நான் தூங்கினேன் தரிசனம் கிடைத்திட தினம் ஏங்கினேன் கரிசனை கொஞ்சம் காட்டிப்போவாயா!  எரிபொருள் கொஞ்சம் தந்து போவாயா! ஒருமுறையேனும் திருமுகம் காட்டாயோ! வரும் வழியெங்கும் இருமருங்கிலும் திருவிழாபோல் அலங்கரித்துன்னை வரவேற்கிறோம்  தருவாயா ஒரு லீற்றர் பெற்றோல் 🥲❤

முருகன் ❤ வள்ளி 🦚மயிலே தூது செல் 🦚[1]

 முருகன் ❤ வள்ளி 🦚மயிலே தூது செல் 🦚[1] பன்னிரு கண்களும் தவிக்கின்றதே பார்த்திட அவளும் வரவில்லையே  பன்னிரு கைகளும் துடிக்கிறதே அணைத்திட அவளும் அருகில்லையே இறைவனாய் இருந்தாலும் அழுது வடிக்கின்றேன்  இணையான அவளை எதிர்பார்த்திருக்கின்றேன் வண்ண மயிலே தூது செல் வள்ளிக்குறத்தி காதில் சொல் ❤ ✍🏻️இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #முருகன்_வள்ளி_காதல்  #நல்லூர் #நித்தியதாஸ்

முருகன் வள்ளி காதல்

 முருகன் ❤ வள்ளி 🦚மயிலே தூது செல் 🦚[1] பன்னிரு கண்களும் தவிக்கின்றதே பார்த்திட அவளும் வரவில்லையே  பன்னிரு கைகளும் துடிக்கிறதே அணைத்திட அவளும் அருகில்லையே இறைவனாய் இருந்தாலும் அழுது வடிக்கின்றேன்  இணையான அவளை எதிர்பார்த்திருக்கின்றேன் வண்ண மயிலே தூது செல் வள்ளிக்குறத்தி காதில் சொல் ❤ ✍🏻️இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #முருகன்_வள்ளி_காதல்  #நல்லூர் #நித்தியதாஸ்

நல்லூர் தேர்

 ஆறு முகமும் அணிமுடிகளும் அணிகலன்களும் அசைந்தாட ஆறிரு தோளும் இணை கரங்களும்  பெருத்த மார்பும் சேர்ந்தாட கூறு செய்யும் திருவேலும் குமரன் கையில் குதித்தாட பூங்கழல்களும் பொற்குடைகளும் அணிசடைகளும் இசைந்தாட சேவல் கொடியும் கொடியிடையுடை  மங்கையிருவரும் இணைந்தாட நல்லை நகரின் வீதிதனிலே தேரில் அமர்ந்து வரும் நாதா மெல்ல மெல்ல அசைந்தசைந்து அழகாய் ஆடி வரும் வேலா இல்லை என்ற சொல்லுமின்றி எல்லாம் அள்ளித் தருவோனே அல்லல் அறுத்து அருகில் எனையும் அணைத்து நீயும் அருள்வாயே ஓம் சரவணபவ 🙏 நல்லைக் கந்தன் சரணம் 🙏 ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️ Nallur Kandaswamy Temple Nallur Kanthaswamy Kovil Nallur Alangara Kanthan - நல்லூர்க் கந்தசுவாமி கோயில் Nallur Kandaswamy Temple - நல்லூர் கந்தசுவாமி கோவில் Nallur Kandaswamy Temple Velmuruhan Vel Vel #நித்தியதாஸ்

❤வள்ளிகுறத்தி காதல் ❤ 🦜💚கிளியே தூது செல்💚🦜[4]

 ❤வள்ளிகுறத்தி காதல் ❤ 🦜💚கிளியே தூது செல்💚🦜[4] மாவிளக்கு ஏற்றி வைத்தேன் மனதில் அழகனை வைத்தேன்  பூவிழியை வழியில் வைத்தேன் புன்னகையை தொலைத்து நின்றேன்  நாவிலவன் நாமம் உச்சரித்தேன் நாயகனை தினம் நினைத்திருந்தேன் கோவிலிலே காத்திருந்தேன் கந்தனை எதிர்பார்த்திருந்தேன்  தேவியிவளை தவிக்கவிட்டே  தேடி வராமல் எங்கு சென்றானோ  காவியுடை கொண்டானோ காசிக்குத் தான் சென்றானோ  கூவிடும் சேவல் குரல் கேட்டதும்  குமரன் வந்தானோ தேடுகின்றேன் ஆவி விடுத்திடுவேன் நான்  அழகன் வரவில்லை என்றால்  வண்ணக்கிளியே தூது செல் வடிவழகன் காதில் சொல்  ❤❤❤ ✍🏻 ️இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #நல்லூர் #நித்தியதாஸ் #முருகன்_வள்ளி_காதல்

💚வள்ளிக் குறத்தி காதல்💚 🦜💚கிளியே தூது செல் 💚🦜[5]

 💚வள்ளிக் குறத்தி காதல்💚 🦜💚கிளியே தூது செல் 💚🦜[5] ஆறு தலை கொண்டவன்  ஆறுதலை எனக்கு தருபவன்  வேறு துணை எனக்கில்லை வெறுத்தாலும் அவனே துணை  மாறுதல் இல்லா மனம் கொண்டேன்    மனதில் அவனுக்கே இடம் கொண்டேன் நீறு தனை நெற்றியில் வைத்தேன் நீடு காலம் அவனை தொழுதேன்  எங்கிருக்கிறானோ அழகன் ஏங்கித் தவிக்கிறேன் நானும்  வனக்குறத்தி எனை தனியே விட்டு வண்ணமயிலேறி எங்கு சென்றானோ அன்னம் தவிர்த்து இருக்கின்றேன்  அவனையே தினம் தொழுகின்றேன் கண்கள் விழித்திருக்கின்றேன்  கண்ணீரில் நான் மிதக்கின்றேன்  குன்றாடும் குமரனை தினம் மன்றாடிக் கும்பிடுகிறேன்  எண்ணமெல்லாம் நிறைந்தவனை எள்ளளவும் பிரிய மனமில்லை  வண்ணக் கிளியே தூது செல் வடிவழகன் காதில் சொல் 🦜🦜🦜❤💚❤ ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #நித்தியதாஸ்

நல்லூர் அழுக்கொடு அலைந்த அசுரன்

 அழுக்கொடு அலைந்த அசுரன்     இழுக்காறு களைந்த கந்தவேலா  ஆணவத்தில் இருந்தவனை     ஆட்கொண்டு அருளிய அருளாளா அனைத்தும் ஆகிய இறையே      ஆக்கும் காரணப் பொருளே  அனுதினம் உனைத் தொழுமென்னை     ஆட்கொள்ள மறுப்பதுமேன்  உனை எதிர்ப்பவனை மட்டும் தான்     ஆட்கொள்வாய் எனில்        உடன் எதிர்க்கவும் துணிவேன்      எனைத் தடுத்தாட்கொள் என் ஐயனே.! நல்லைக் கந்தா சரணம் 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 ✍🏻️இணுவை நித்தியதாஸ் ✍🏻️  Nallur Kanthaswamy Kovil Nallur Kandaswamy Temple Nallur Kandaswamy Temple nalluran.com Velmuruhan Vel Vel Sindu Pathmasri RISHI Photography #நல்லூர் #நித்தியதாஸ்

வள்ளிக்குறத்தி காதல் 💚 🦜கிளியே தூது செல்🦜[2]

 வள்ளிக்குறத்தி காதல் 💚 🦜கிளியே தூது செல்🦜[2] பன்னிரு கண்ணிருந்தும் என்ன பயன் பார்வைகள் என்மேல் விழவில்லையே பன்னிரு கையிருந்தும் என்ன பயன்  அணைத்திட அவனும் வரவில்லையே பன்னிரு தோளிருந்தும் என்ன பயன் நான் சாய்ந்திட ஒரு தோள் தரவில்லையே  என்னழகன் நினைப்பிலே கண்ணீர் வடிக்கின்றேன் வண்ணக்கிளியே நீ தூது செல்லாயோ 💚💚💚🙏🙏🙏 ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #முருகன்_வள்ளி_காதல் #நித்தியதாஸ்

முத்தற்ற பெடிக்கு மூளை கழண்டுபோச்சு

 முத்தற்ற மூத்த பெடி முறுக்கிக்கொண்டு திரிஞ்ச பெடி  மூலை முடக்கெல்லாம் மடக்கி வெட்டி ஓடின பெடி  முகம் பார்த்து சிரிக்கமாட்டான் முகப்புத்தகத்தில் மட்டும் சிரிப்பான் முன் நின்று பேசமாட்டான்  மூஞ்சியை விறைப்பாவே வச்சிருப்பான்  சின்னப் பெடியன் பெரிய நினைப்பு சினேகிதங்கள் கூடிப்போச்சு சிகரெட்டு தண்ணி எண்டு சீரழிஞ்சு போயிட்டான்  அல்லும் பகலும் ஓட்டம்தான்  அக்கம் பக்கம் பாக்கமாட்டான்  சிக்னல் போட்டு திரும்பமாட்டான்  சிக்னலிலும் நிக்கமாட்டான்  அவசரத்தில போறான் எண்டு அம்புலன்ஸே வழிவிட்டு நிக்கும்  ஆளைக் கண்டு கனகாலம் ஆரன் கண்டியளோ எங்காவது  சைக்கிள் ஓடி ஓடியே  சைக்கோ ஆயிட்டதாக ஒரு கதை பைக் ஓடுற நினைப்பில பென்டில வெட்டி விழுந்தெழும்புறானாம்  பெற்றோல் லைனில் நிற்பதாக பாத்த சிலர் சொல்லிப் போயினம்  சைக்கிளுக்கு அடிக்கச் சொல்லி செட்காரரோடு சண்டையாம்

சந்நிதி முருகன் தீர்த்தம்

 காற்று வந்து எந்தன் காதில்    கந்தன் நாமம் ஓதியதே  ஆற்றங்கரையில் மோதும் அலைகள்              அழகன் நாமம் கூறியதே ஊற்றாய் என்னுள் இருக்கும் நாதன்        தேற்றி எனையும் ஆற்றுவோன் ஏற்றுக்கொண்டு தினம் எனக்கு      ஏற்றம் தந்து அருளுவோன்  போற்றிக் கதிர்காமர் பூசித்த வேலன்      போற்றித் தொழும் அடியார் சூழ தோற்றம் கொண்ட சந்நிதியில்     தீர்த்தமாடி மகிழ்கின்றான் ஓம் சரவணபவ 🙏 சந்நிதி முருகன் துணை 🙏 ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️

புதிதான அதிகாலை

 புதிதான காலைப்பொழுது  வழக்கமாக வாகன இரைச்சல்களோடு விடியும் காலை இன்று மட்டும் புதிதான அனுபவம் தந்தது  செம்பாட்டு புழுதி வாசம் கலப்படமில்லாமல் இருந்தது  செங்கதிரோனும் அளவில்லா ஆனந்தம் கொண்டிருப்பான் இன்று வரவேற்பு  சற்று அதிகமாக இருந்தது  நேரந்தவறி வரும் பட்டாம்பூச்சிகள் கூட  இன்று நேரத்துக்கே வந்துவிட்டன காரணம் கேட்டேன் பூக்கள் மலரும் ஓசை இன்றுதான் தடங்கலின்றி கேட்டதாம்  பறவைகள் எழுப்பும் ஒலிகள்  எந்தவொரு தடங்கலும் இல்லாமல் கேட்டது தேனீக்களின் ரீங்காரமும் தூரத்து கோயிலின் ஓம்காரமும் மிகத் துல்லியமாக கேட்டது  அணில்களின் கீச் கீச் ஒலியும் அன்னலிங்கத்தாரின் மிதிவண்டி எழுப்பும் கீச் கீச் ஒலியும் இன்றுதான் வேறுபிரித்து உணரக்கூடியதாக இருந்தது  இந்த ரம்மியமான பொழுதுகள் நீடித்திருப்பதெல்லாம்  மிதிவண்டிகள் கொல்லைக்குள் போகும் வரை மட்டுமே ✍️ இணுவை நித்தியதாஸ் ✍️

பரராசசேகரன் திருமஞ்சம்

 மஞ்சத்திலே பவனி மஞ்சத்திலே பவனி நெஞ்சத்திலே மகிழ்ச்சி நெஞ்சத்திலே மகிழ்ச்சி பஞ்சமுக விநாயகன் பரராச சேகரன்  குஞ்சர முகத்தோனால் செழிப்புறும் அவனி  மஞ்சத்திலே பவனி மஞ்சத்திலே பவனி விஞ்சிடும் அழகுக்கு ஈடு இணையேது வெஞ்சமரில் வென்ற வேலவனும் இன்று  கொஞ்சிடும் வள்ளி தெய்வயானையொடு பவனி மஞ்சத்திலே பவனி மஞ்சத்திலே பவனி அஞ்சிடும் பகைகளும் அருகினில் நீயிருந்தால் துஞ்சுவேன் தூயவனே நின் கழலடி இக்கணமே தஞ்சமென வந்தேன் தடுத்தென்னை ஆட்கொள்வாயா 🙏🙏🙏 ✍️இணுவை நித்தியதாஸ்✍️

💕கண்ணம்மா என் காதலி💕

 💕கண்ணம்மா என் காதலி💕 தேடித் தொலைத்த பொருள் கண்ணம்மா! தொலைத்து தேடிய பொருள் கண்ணம்மா! கோடி கொடுத்திடினும் கண்ணம்மா-உன் குணத்துக்கு ஈடாகுமோ சோடினை இல்லா அழகியடி கண்ணம்மா! சோடி இழந்த பறவை நானடி கூடிக் களிப்புறவே கண்ணம்மா! கிளிக்கொரு கூண்டினை பரிசளித்தேன்   கூட்டுக்குள் ஏதின்பம் எனவே கண்ணம்மா! கிளியை வானத்தில் பறக்கவிட்டேன் கிளிக்கூண்டு மட்டும் வெறுமையில்லை கண்ணம்மா! மனக்கூண்டும் வெறுமையடி பதில் சொல்லம்மா! ✍️✍️✍️இணுவை நித்தியதாஸ்✍️✍️✍️

விடையேறிய பெருமானார் நல்லைக் கந்தன்

 விடையேறிய பெருமானார் விடமுண்டவனின் மகனார் தடை யாவும் உடைத்தெறிவோன் இடம் நல்லைப் பதியுடையோன்  உடை வானமதை அணிந்தே உடன் மாலைகளும் அணிந்தே  இடை குறுகிய இணைகளுடன் விடையேறியே வலம் வந்தார் 💙💙💙 நல்லை கந்தா சரணம் 🙏 ஓம் சரவணபவ 🙏 ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #நல்லூர்2022 #நித்தியதாஸ்

காற்றுக்கு வாசனை கொடுக்கிறாள்

 காற்றுக்கு வாசனை கொடுக்கிறாள்  கன்னி என் முன்னே சிரிக்கிறாள் சேற்று விழிகளில் என்னை புதைக்கிறாள் சேதி ஒன்று சொல்ல முனைகிறாள்  சோற்றுப் பருக்கைகளும் சுவை கூடுதே! உண்ட எச்சில் சோறினால் உயிரினங்களும் மோட்சமடையுதே! ஊற்று இதழ்களில் ஊறும் தேனை  நூற்றுக்கணக்கில் நுகரத் துடிக்கும் வண்டினங்களிடமிருந்து அவளை எங்ஙனம் காப்பேனோ  ஏற்றுக்கொண்டிடில் எனை இக்கணமே  எளிதினில் காப்பேன் மறுகணமே  😍😍😍

நல்லைக் கந்தன்

 வேதாகமப் பொருளே வேலான மெய்ப்பொருளே  வேராக ஊன்றி உள்ளிருப்போனே.!  ஆதாரமான இறை ஆசாரமாகத் தொழ  ஆகாரமின்றி நானிருப்பேனே.!  பாதார விந்தம் பணிந்திடவே வந்தேன்  போதாது மீண்டும் வருவேனே.!  தீதான பகையும் மோதாது எனையும் ஓதாது உனையும் மறப்பேனோ.!  நாதா உனை நானும் நாவாரப் பாட நாவில் எந்நாளும் இனிப்பாயே.! பூதா விதானம் நாலா புறம் கொண்ட மூதான நல்லைப் பெருமாளே.!  ஓம் சரவணபவ 🙏🙏🙏 ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #நல்லூர்2022 #நித்தியதாஸ்

செத்தபின்னும் நிம்மதி இல்லை

 செத்தபின்னும் நிம்மதி இல்லை சீரழிந்த நாட்டினிலே  அத்தனைக்கும் வரிசை இங்கே அல்லும் பகலும் அலைகின்றோம் பெத்த பிள்ளையும் வரிசையிலே பள்ளி செல்லும் வயதினிலே வாத்தியாரும் வரிசையிலே வகுப்பெடுக்கும் நேரத்திலே  நத்தை போல நகர்கின்றோம் நடுத்தெருவில் நிற்கின்றோம்  எத்தனையோ தடவைகள் நாம்  ஏமாற்றப் படுகின்றோம்  நித்தம் நித்தம் சோதனைகள் நீண்டு செல்லும் வேதனைகள்  புத்தனுக்கே போதனைகள் போதிக்கின்ற நாடு இது  சத்தான உணவுமில்லை சரிவர தூக்கமில்லை  பித்துப் பிடித்து அலைகின்றோம் பிச்சைக்காரர் ஆகிவிட்டோம்  முத்துக் கொழிக்கும் நாட்டில் இன்று முழி பிதுங்கி நிற்கின்றோம் ✍️ இணுவை நித்தியதாஸ் ✍️

கந்தறுந்த நிலையில் உள்ளோம் கந்தையா

 கந்தறுந்த நிலையில் உள்ளோம் கந்தையா எங்கள் கந்தையா காட்சி தந்து அருளுமையா கந்தையா எங்கள் கந்தையா  சொந்த நாட்டில் வாழ்வதற்கே முருகையா எங்கள் முருகையா சோதனை மிக அதிகமையா முருகையா எங்கள் முருகையா  நொந்த கதை சொல்லித்தீராது வேலையா எங்கள் வேலையா நொடிக்கொருமுறை நொந்துபோகிறோம் வேலையா எங்கள் வேலையா  சந்தைகளில் காய்கறிகள் கந்தையா  எங்கள் கந்தையா சொத்து வித்துத்தான் வாங்கவேண்டும் கந்தையா எங்கள் கந்தையா  பந்தியிலும் ஒரு கறிதான் முருகையா எங்கள் முருகையா பிந்திவிட்டால் அதுவுமில்லை முருகையா எங்கள் முருகையா எந்த பொருள் வாங்கிடினும் வேலையா எங்கள் வேலையா இந்தப் பணம் போதவில்லை வேலையா எங்கள் வேலையா  எந்தத் தொழில் செய்வதென்று கந்தையா  எங்கள் கந்தையா எங்களுக்கு தெரியவில்லை கந்தையா எங்கள் கந்தையா  முந்தி ஒரு காலத்திலே முருகையா  எங்கள் முருகையா முத்துக் கொழிக்கும் நாடு இது முருகையா எங்கள் முருகையா  பிந்தி வந்த ஆட்சியரால் வேலையா எங்கள் வேலையா பின்தங்கிப் போனோமையா வேலையா எங்கள் வேலையா  நந்தி போல குறுக்கே சிலர்  கந்தையா  எங்கள் கந்தையா நகர மறுத...

முருகன் ❤ வள்ளி காதல் [2]

 முருகன் ❤ வள்ளி காதல் [2] ஒருதலைக் காதல் ஒன்றை  ஒருத்தி மேல் கொண்டிருந்தேன்  திருமகளை அன்றொரு நாள் வரும் வழியில் கண்டிருந்தேன்  கருவிழியால் கவர்ந்திழுத்தாள்  கார் குழலால் கட்டி இழுத்தாள் இரு புருவம் உயர்த்தி நின்றாள்  சருகெனவே தரையில் விழுந்தேன் பருவ மங்கை அவளைக் கண்டு  திருவதனமதில் மயங்கி நின்று  பெரும் காதலொன்று கொண்டு  இருதயமதை இழந்து நின்றேன்  முருகான முகம் கொண்டவளின்  அருகினிலே சென்றவளின்  திருநாமம் என்னவென வினவிடவே  திருவாய் மலர்ந்தாள் வள்ளியென்றே  பிறிதொருநாள் பின்னே செல்ல  அறியாதவள் போல் நடித்தாள்  சீறிச் சினத்துக் கொண்டவள்  வெறுத்தெனையும் வேண்டாமென்றாள்  ஆறுதலை கொண்டவன் நான் ஆறுதல் இன்றி இருக்கின்றேன் வேறு துணை எனக்கில்லை வெறுத்தாலும் அவளே துணை ❤❤❤ Nallur Kandaswamy Temple Nallur Kanthaswamy Kovil Nallur Kandaswamy Temple - நல்லூர் கந்தசுவாமி கோவில் Nallur Kandaswamy Temple Velmuruhan Vel Vel #நித்தியதாஸ்

முருகன்_வள்ளி_காதல்

 💚முருகன்❤வள்ளி காதல் 💚 💚🦚மயிலே தூது செல்🦚💚[4] பூசை எதுவும் தேவையில்லை நேசக்குறத்தி பாசம் மட்டும் போதும்  பூக்கள் எதுவும் தேவையில்லை பூவையவள் அருகிருந்தால் போதும் சந்தன வாசம் தேவையில்லை வஞ்சியவள் வாசம் மட்டும் போதும் சாமரங்கள் தேவையில்லை அவள் தேகம் தொட்ட தென்றல் போதும் மயில் தோகை தேவையில்லை மங்கையவள் தோகைக் கூந்தல் போதும் தேனும் திணைமாவும் தேவையில்லை வள்ளியவள் தேனிதழ்கள் போதும் வண்ண மயிலே தூது செல் வள்ளிக்குறத்தி காதில் சொல்  💚💙💚 ✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️ #நல்லூர் #நித்தியதாஸ் #முருகன்_வள்ளி_காதல்

இணுவில் பெருமஞ்சம்

  மஞ்சம் காண வாரீர் பெருமஞ்சம் காண வாரீர் நெஞ்சம் நிறைந்த அழகன் திருமஞ்சம் காண வாரீர் கொஞ்சும் தமிழ்க் குமரன் பெருமஞ்சம் காண வாரீர் விஞ்சும் அவன் அழகை விரைந்து காண வாரீர் விழாக்கோலம் பூண்ட இணுவிலிலே வீழா வீரம் கொண்ட மண்ணினிலே கலாப மயிலாடும் கந்தன் வீதியிலே உலாப்போகும் பெருமஞ்சம் காண வாரீர் வீதி மருங்கில் மாவிலை தோரணங்கள் சேதி சொல்லும் தோரணை பாரீர் ஆதிசிவன் பாலகனை காண வாரீர் மேதினியில் பெருமஞ்சம் காண வாரீர் காவடிகள் ஆடிவரும் -கந்தன் சேவடியை நாடி வரும் பால் குடம் பவனி போகும்- எங்கள் கால் தடம் அதன் வழி போகும் சங்குவேலி வயற்பரப்பில் புதுநெல் எடுத்தே பொங்கலிட்டு கந்தனுக்கு படைத்திடுவோமே சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊரிலே எங்கள் பெருமஞ்ச நாயகனை போற்றிடுவோமே இணுவைக் கந்தா சரணம்🙏

என் ஊர்

  செம்பாட்டு புழுதி வாசம் நம்மூரு இணுவில் நேசம்  என் பாட்டன் கதைகள் எல்லாம் காற்று வந்து காதில் பேசும் இலந்தை முள்ளை திருத்தினாலும் இணுவிலாரை திருத்தேலாது குழந்தை போல மனசு கொண்டோர் குழப்படிக்கும் குறைவே இல்லை கிழங்கெண்டு பேரேடுத்த ஊரடா-நல்ல வளங்கள் நிறைந்த நம் ஊரடா புகையிலைக்கு பெயர் போன ஊரடா பொன் விளையும் விவசாய பூமியடா பண்டிதரும் பாவலரும் கொண்ட ஊர் பண்பாடு பலகலைகள் காக்கும் ஊர் விளையாட்டு, வீரங்கள் நிறைந்த ஊர் விலை போகா மதத் திமிரை கொண்ட ஊர் வானுயர்ந்த கோபுரங்கள் இங்குண்டு - ஊர் எல்லை காக்கும் சாமிகளும் இங்குண்டு கண்கவரும் காட்சிகளும் இங்குண்டு- போர்க் குணம் கொண்டோர் வரலாறு பலவுண்டு 

இலங்கையில் வாழ்ந்துபார்...

  இலங்கையில்   வாழ்ந்துபார்... இலங்கையில்   வாழ்ந்துபார்.. உன்னை சுற்றி கடன்தொல்லை கூடும் ராத்திரியில் விலைவாசி ஏறும் கேட்டவுடன்  pressure லெவல் ஏறும் நீயும் கடனாளி ஆவாய் பெற்றோல் வரிசைக்கு ஒரு பிள்ளை காஸ் வரிசைக்கு ஒரு பிள்ளை பாண் வரிசைக்கு ஒரு பிள்ளை பால் வரிசைக்கு ஒரு பிள்ளை என்று சொல்லிச் சொல்லி வரிசையாக நாலு பிள்ளை பெறுவாய் இலங்கையில்   வாழ்ந்துபார்.... ராத்திரி பகல் தெரியாது காத்திருப்பாய் மணிக்கணக்காய் பெற்றோல் செட்காரன் தெய்வமாவான் அரை லீற்றர் கிடைத்தாலும் அமிர்தமாய் உணர்வாய் குறுக்கே யாரும் வந்தால் உனக்கும் கோபம் வரும் கண்கள் ரெண்டும் சிவந்துகொள்ளும் கைகள் ரெண்டும் முறுக்கேறும் இறுதியில் உனக்கும் கெட்ட வார்த்தை வரும் இலங்கையில் வாழ்ந்துபார்.... இந்த சங்கிலி இந்த மோதிரம் இந்த கடுக்கன் இந்த அரைநாண் கயிறு எல்லாம் அரசால்தான் அடகு என்பாய் இந்த வீட்டுக்கடன் இந்த வாகனக்கடன் ஏன் மொபைல் data கடன் கூட இந்த அரசாங்கத்தின் ஏற்பாடு என்பாய் இலங்கையில்  வாழ்ந்துபார்... அரசாங்க சம்பளம் அரச கடனுக்கே கழிய வேண்டுமா அதற்காகவேனும் வேற...

என் கனா

நேற்றுப் பொழுதினில்  நீண்ட  இரவினில்  நெடிய கனவொன்று கண்டிருந்தேன் வேற்று உலகொன்றில் வேறெவருமின்றி நானும் அவளும் தனித்திருந்தோம் ஆற்றங்கரையினில் அந்திப் பொழுதினில் அவளை அணைத்தே அமர்ந்திருந்தேன் காற்று வெளியினில் கூந்தல் உலர்த்தியே காந்த விழிகளை ரசித்திருந்தேன் ஊற்று இதழ்களில் ஊறிய அமிர்தத்தை உதடுகள் கொண்டே சுவைத்திருந்தேன் நூற்றுக் கணக்கில் நுழையவிருந்த தேனீக்களின் நுழைவு மறுக்கப்பட்டு எனக்கு மட்டும் அனுமதி கிடைத்திருந்தது ஏற்றுக் கொண்டதும் எப்போது நடந்ததென எண்ணிய பொழுதினில் என் கனா கலைந்ததே

பனங்காய் பணியாரமே!

பனங்காய் பணியாரமே! சுணங்காம வாயேண்டி! கொக்கறையா காயிறண்டி! அக்கறையா தாயேண்டி! சிரித்தாயே குருத்தோலையாய்  விழுந்தேனே காவோலையாய்  கருப்பட்டிக் கண்ணுக்குள்ள நானும் உருப்படியா தொலஞ்சேனே! கள்ளூறும் உன் பார்வை உள்ளூற என்னோ பண்ணுதடி! நொங்கு உதடு ரெண்டை  நோகாமல் குடிக்கப் போறன் ஒத்தைப் பனை மரமாய்  ஒத்தையில நிக்கிறண்டி  ஓலைக் குடிசையில ஒடியல் கூழ் செஞ்சு தாடி! சேலைத் தலைப்பில் என்னை  சேர்த்தே முடிஞ்சுக்கடி!