கண்ணம்மா என் காதலி 1
கலைந்தாடும் கூந்தல் அழகு
கனிவான பேச்சு அழகு
கலையான அழகை கண்டு
கவிழ்ந்தேனே காதல் கொண்டு
தொலைத்தேனே இதயம் ஒன்று
தொடுத்தாயே காதல் அம்பு
இளைத்தேனே நானும் இன்று
இளமானே உன்னைக் கண்டு
முழைத்ததே சிறகு ரெண்டு
மிதந்தேனே காற்றில் நின்று
நுழைந்தாயே விழியின் வழியே
நகைந்தாயே புன்னகை மொழியே
மலைத்தேனே வனப்புக் கண்டு
மறுப்பேனா வேண்டாம் என்று
மலைத்தேனை இதழில் கொண்டாய்
மாறிவிடவா நானும் வண்டாய்
திளைப்பாயா அன்பில் வென்று
துடித்தேனே ஏங்கி நின்று
அழைப்பாயா அன்பே என்று
அணைப்பாயா பக்கம் வந்து
அலைந்தேனே உந்தன் பின்னே
அவிழ்ப்பாயா மௌனம் முன்னே
பிழைப்பேனே நானும் பெண்ணே
பிடிவாதம் வேண்டாம் கண்ணே
❤🔥❤
இணுவை நித்தியதாஸ்

Comments
Post a Comment