தீராத போதை ❤
தீராத போதையே
தீர்வாகும் போதையே
தீயான போதையே
திமிரான போதையே
திளைத்தேன் உன் மீதே
திகைத்தேன் அப்போதே
கோதை உனை ரசித்தே
தா தை எனக் குதித்தேன்
கண்கள் போதை
கன்னங்கள் போதை
புன்னகை போதை
பொன்னிறம் போதை
இதழ்கள் போதை
விரல்கள் போதை
கருங்குழல் போதை
கழுத்திலும் போதை
காதலான போதை
கன்னி காட்டும் போதை
தேவையான போதை
தேவதை இவள் போதை
இடை விடாத போதை
இதழ் படாத போதை
இணை தொடாத போதை
எனை விடாத போதை
புதிதானது இந்த போதை
புரியாதது இந்த போதை
போதாது இந்த போதை
போவேனா இப்போதே
இப்போதை எப்போது
எனைச் சேருமோ
அப்போது இப்போதை
எனக்காகுமோ ❤

Comments
Post a Comment