இருமனம் ஒருமனமாய் இணைந்திட்ட திருமணமாகி ஆனதே ஆண்டுகள் பத்து மணமேடை தனிலேறி மங்கல நாண் பூட்டி ஆனதே ஆண்டுகள் பத்து கணையாளி கைமாறி துணையாகி கைபிடித்து ஆனதே ஆண்டுகள் பத்து அக்காளும் அத்தானும் ஒப்பாரும் மிக்காருமாகி ஆனதே ஆண்டுகள் பத்து உண்மைக் காதல் உயிர்ப்புடன் கண்முன் வாழும் சாட்சியாய் ஆனதே ஆண்டுகள் பத்து
Posts
Showing posts from April, 2023
- Get link
- X
- Other Apps
நாலு பல்ப்பும் நாற்பது பேரும் வேட்பாளர் தொகை பெருகிப் போச்சு வாக்காளர் நிலமை(யோ) பரிதாபமாப் போச்சு நாலு பல்ப்பு மாத்த நாற்பது பேர் போட்டி நாகரீகமாம் அதுக்கொரு நாலு முழ வேட்டி வெளியில போக பயமா இருக்கு வில்லங்கத்துக்கு சிரிக்கிறாங்கள் வெட்டியா திரிஞ்சவனும் வேட்பாளரா இறங்கிட்டான் சட்டம் பற்றி என்னென்னவோ பேசுகிறான் சட்டம் படிச்சவனுக்கே வகுப்பெடுக்கிறான் வீட்டுகாரிக்கு பயந்துகொண்டு வீட்ட விட்டு வெளியில் வராதவன் வேட்பாளர் எண்டு ஆன பின்னே றோட் அளந்து திரியிறான் அயலவன் எண்டு நினைச்சு எப்பவாச்சும் உதவி கேப்பன் அப்ப எல்லாம் செய்யாதவன் இப்ப வந்து உதவி தேவையா எண்டு அநியாயத்துக்கு நடிக்கிறான் அவசரத்துக்கு கோல் எடுத்தா அஞ்சு நாள் கழிச்சு திருப்பி எடுக்கிறவன் நான் எடுக்காமலே அவசரமோ ஏன் எடுத்தனி எண்டு எடுத்து கேக்கிறான் கண்டு பெருசா சிரிக்காத ஒருத்தர் கேட்டுத்தான் சிரிப்பை வாங்கோனும் பாக்கிற நேரமெல்லாம் சிரிக்கிறார் பல்லைக் காட்டிக்கொண்டு திரியிறார்- அட கடைவாய் பல்லு சூத்தை எண்டு கண்டுபிடிச்சு சொன்னதே ...
- Get link
- X
- Other Apps
அச்சம் மடம் நாணம் கொண்டே அச்சுறுத்தும் அழகியவள் அச்சாறாய் எச்சில் ஊறும் அச்சில் வார்த்த பாவையவள் அவசரமாய் பூக்கள் பூப்பதேன் அவள் சரமாய் மாறிடத்தானோ அவள் வசமாய் தென்றல் நுழைவதேன் அவள் வாசம் வீசிடத்தானோ அதிசயமே அசர வைத்தாள் அதிரசத்தை உதட்டில் வைத்தாள் அதிகாரம் அதிகம் வைத்தாள் அதிகமாக காதல் வைத்தேன் அழகினிலே உறைய வைத்தாள் அழகியலின் அர்த்தம் காட்டினாள் அழகியவளை நெஞ்சில் வைத்தேன் அழுதரற்றுகின்றேன் அவள் நினைவில்
சிவகாமி அம்மன்
- Get link
- X
- Other Apps
நெஞ்சமதில் நிறைந்த அன்னை ம ஞ்சமதில் அமர்ந்து வந்தாள் தஞ்சமென நாடி வந்தேன் தாயே சரணம் என்றேன் நஞ்சுண்ட கண்டனின் நாயகி நதி சடை கொண்ட பூரணி அஞ்சுதல் அழிக்க வந்தாள் ஆறுதல் கொடுக்க வந்தாள் விஞ்சிடும் அவள் அழகில் வியந்து நானும் நின்றிருந்தேன் வஞ்சியவள் அழகை நானும் வர்ணிக்க வார்த்தை இல்லை மஞ்சள் நிறத்தவளைக் கண்டேன் மதியொளி முகத்தவளை தொழுதேன் வஞ்சகம் சூழ் உலகில் வந்தெனை காத்திடு என்றேன் குஞ்சர முகத்தோன் வந்தான் குறையாத அருளைத் தந்தான் கொஞ்சிடும் இணையர் அருகிருக்க குமரனும் காட்சி தந்தான் நெஞ்சமதில் நிறைந்த அன்னை மஞ்சமதில் அமர்ந்து வந்தாள் தஞ்சமென நாடி வந்தேன் தாயே சரணம் என்றேன்
நிலவும் வானம் உடுத்தி
- Get link
- X
- Other Apps
நிலவும் வானம் உடுத்தி உலாவி வரக் கண்டேன் அழகு சிலை இவள் மேல் அலாதி பிரியம் கொண்டேன் வரவை எதிர்பார்த்திருந்தேன் வரங்கள் வேண்டி நின்றேன் விரல்கள் அசைத்து நின்றாள் விரதம் கலைத்து நின்றேன் கண்மணி வருகையிலே கண்ணிமைக்க மறந்தேனே புன்னகை உதிர்ந்தாளே புத்துணர்ச்சி பெற்றேனே மல்லிப்பூ கொண்டையிலே மயங்கி நானும் நின்றேனே அள்ளி முடிந்த கூந்தலிலே அத்தனை அழகு கண்டேனே பவ்வியப் பேச்சில் நானும் பக்குவம் அடைந்தேனே செவ்விதழ் அமிர்தத்தை எவ்விதம் அடைவேனோ ❤
இணுவில்_சிவகாமி_அம்மன்
- Get link
- X
- Other Apps
திருக்கயிலை ஏகினாள் சிவகாமி 🙏 சந்திரனும் கீழிறங்கி ஒளி கொடுத்து நிற்க இந்திரன் முதலான தேவர்கள் வரவேற்று நிற்க அந்தணர் மந்திரங்கள் ஓதிட அடியவர் சூழ நிற்க அன்னை சிவகாமி திருக்கயிலை ஏகினாள் திங்கள் முக மங்கை செங்கண் மாலின் தங்கை தங்க நிற மேனியள் தன்னிகர் இல்லாதாள் சங்கடங்கள் தீர்த்திடும் எங்கள் சிவகாமி சங்கரனும் துணையாக திருக்கயிலை ஏகினாள் முந்தி உதித்தான தந்தம் முறித்தான தொந்தி பெருத்த கணபதியும் உடன் ஏக பிந்தி உதித்த கந்தக் கடவுளும் ஈறாக மங்கையிருவரொடு கயிலைஏகினார் நந்தியானவரும் வரவேற்று நின்றார் வந்த நாரதரும் அன்னையை உவகைகொளச்செய சிந்தை மிகுதியாய் மகதி இசைத்து பாடினார் நந்தியானவரும் இணைந்து பாடினார் தந்தி அறும்வரை இராவணனும் சந்தமுடன் சிந்து பாடினான் சிந்தையில் நிறைந்த சிவகாமி - ஈற்றில் வந்தடைந்தாள் இணுவையம்பதியை ஓம் சக்தி தாயே ❤🙏❤ #இணுவில்_சிவகாமி_அம்மன்_கோவில்_பெருந்திருவிழா_2023 #8ம்_நாள் Inuvil Sivakami Amman Kovil
இணுவில்_சிவகாமி_அம்மன்_கோவில்_பெருந்திருவிழா_2023
- Get link
- X
- Other Apps
நெஞ்சமதில் நிறைந்த அன்னை மஞ்சமதில் அமர்ந்து வந்தாள் தஞ்சமென நாடி வந்தேன் தாயே சரணம் என்றேன் நஞ்சுண்ட கண்டனின் நாயகி நதி சடை கொண்ட பூரணி அஞ்சுதல் அழிக்க வந்தாள் ஆறுதல் கொடுக்க வந்தாள் விஞ்சிடும் அவள் அழகில் வியந்து நானும் நின்றிருந்தேன் வஞ்சியவள் அழகை நானும் வர்ணிக்க வார்த்தை இல்லை மஞ்சள் நிறத்தவளைக் கண்டேன் மதியொளி முகத்தவளை தொழுதேன் வஞ்சகம் சூழ் உலகில் வந்தெனை காத்திடு என்றேன் குஞ்சர முகத்தோன் வந்தான் குறையாத அருளைத் தந்தான் கொஞ்சிடும் இணையரொடு குமரனும் காட்சி தந்தான் நெஞ்சமதில் நிறைந்த அன்னை மஞ்சமதில் அமர்ந்து வந்தாள் தஞ்சமென நாடி வந்தேன் தாயே சரணம் என்றேன் ஓம் சக்தி தாயே ❤🙏❤ #இணுவில்_சிவகாமி_அம்மன்_கோவில்_பெருந்திருவிழா_2023 #6ம்_நாள்_மஞ்சம் Inuvil Sivakami Amman Kovil
இணுவில்_சிவகாமி_அம்மன்_
- Get link
- X
- Other Apps
நாத இசையினில் நாகம் அசைந்திட நாயகி அசைந்தாடி வருகின்றாள் மாதம் பங்குனியில் நாமும் கூடிட மனம் மகிழ்ந்தாடி வருகின்றாள் மோதகப் பிரியனும் பாதம் தூக்கியே மேள தாள இசையில் ஆடுகின்றான் வேதம் ஒலித்திட வேதியர் செபித்திட வேலவனும் ஆடி வருகின்றான் பாதக் கமலங்களில் பாவம் கழிந்திட பார்வதியை நாமும் தொழுவோமே ஓம் சக்தி தாயே ❤🙏❤ #இணுவில்_சிவகாமி_அம்மன்_கோவில்_பெருந்திருவிழா_2023 #5ம்_நாள்