இயற்கை என் காதலி 2
அழகான காலைப் பொழுதில்
அவளை நான் கண்டேன்
பேரழகி அவள்
பச்சை உடுத்தியிருந்தாள்
பனித்துளிகள் அவள் உடலை நனைத்திருந்தன
பூக்களாய் பூத்துக் குலுங்கினாள்
படடாம்பூச்சியாய்
இறக்கை அடித்து பறந்தாள்
காற்றாய் வந்து தலை கோதினாள்
தென்றலாய் வந்து தாலாட்டினாள்
அவளின் ஏற்ற இறக்கங்களும்
வளைவு நெழிவுகளும் என்னை
நகராமல் நிற்கச்செய்தன
அருவி எனும் கூந்தலில்
முகம் புதைத்து இதழ் நனைத்து
மோகம் தீர்த்தேன்
இயற்கை என் காதலி❤

Comments
Post a Comment