கண்ணம்மா என் காதலி 2

ஒளியினில் ஒரு தேவதை

ஒளிர்ந்தாள் என் தாரகை

விழிகளில் ஒருவித போதை

விழித்தேன் இவள் என் காரிகை 


சிரித்தாள் அழகிய தேவதை

புரிந்தேன் என் உடல் தேய்வதை 

மகிழ்ந்தேன் இதயம் நோவதை

மறுப்பேன் எனைவிட்டு போவதை 


வானவில் புருவம் வளைத்தாள்

நானதில் முழுதும் தொலைத்தேன்

பாணத்தை விழியால் தொடுத்தாள்

நாணத்தில் தலை குனிந்தாள் 


பால்வெளியில் நீந்தும் இரு கோள்கள்

பார்த்தேன் அது அவள் கண்மணிகள்

புல்வெளி கண்ட ஆட்டுக்குட்டியாய்

பூவையிவளைக் கண்டு மனம் கூத்தாடுதே

 ❤🔥❤

இணுவை_நித்தியதாஸ்


Comments