மேலான காதல் என்பது மேலைத்தேயம் மீதானது



பொத்தி வச்ச பூஞ்செடி - உன்னை

சுத்தி வந்தேன் நானடி

சத்தக கண்ணால் சீவுறாய் - எதுக்கு 

சண்டித்தனம் காட்டுறாய் 


வத்தலா நான் காயிறன் - வீட்டு

வாசலில தான் கிடக்கிறன் 

வித்தை பல காட்டுறாய் - நின்று 

வேடிக்கை நான் பார்க்கிறேன் 


அத்தை மகள் பூங்கொடி - ஏனோ  

அடம்பிடித்து இருக்கிறாய்

ஒத்தையில நான் நிக்கிறன் - நீயோ

ஒதுக்கி வச்சு நடக்கிறாய் 


பத்தி இதயம் எரியுதடி - வீணா 

புத்திகெட்டு காதலிச்சன் 

கத்திக் கத்தி அழுதழுது - எமக்கு

காலம் வீணா போகுதடி 


வாழைத் தண்டே வாச செண்டே -உன்

மேல நானும் ஆசை கொண்டேன்

நாளும் உன்னை எண்ணி எண்ணி

ஏழை நானும் வாடுறண்டி 


ஆளான நாள் முதலா ஆதாரமானவளே

ஆழமான காதல் என்றெல்லாம் சொன்னவளே 

மேலான காதலை உதறித் தள்ளிவிட்டு 

மேலைத்தேயம் போக எப்படித்தான் துணிந்தாயோ

Comments