முருகன் ❤ வள்ளி காதல் முன்மொழிவு [1]

 முருகன் ❤ வள்ளி

காதல் முன்மொழிவு [1]


வனத்துறைந்திட்ட வேடன் யான்

தினம் மான் வேட்டைக்கு வருபவன் 


எனைக் கவர்ந்திட்ட இளமானை கண்டேன்

எனை அறியாமல் காதலும் கொண்டேன் 


கணை தொடுத்திட்ட இரு கண்கள் கண்டேன்

கணப்பொழுதினில் சரிந்தே வீழ்ந்தேன் 


மனத்துறைந்திட்ட இளமானே நில்லு 

மனம் திறந்து உந்தன் நாமம் சொல்லு

❤❤❤


✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️

#முருகன்_வள்ளி_காதல்

#நித்தியதாஸ்

Comments