செத்தபின்னும் நிம்மதி இல்லை
செத்தபின்னும் நிம்மதி இல்லை
சீரழிந்த நாட்டினிலே
அத்தனைக்கும் வரிசை இங்கே
அல்லும் பகலும் அலைகின்றோம்
பெத்த பிள்ளையும் வரிசையிலே
பள்ளி செல்லும் வயதினிலே
வாத்தியாரும் வரிசையிலே
வகுப்பெடுக்கும் நேரத்திலே
நத்தை போல நகர்கின்றோம்
நடுத்தெருவில் நிற்கின்றோம்
எத்தனையோ தடவைகள் நாம்
ஏமாற்றப் படுகின்றோம்
நித்தம் நித்தம் சோதனைகள்
நீண்டு செல்லும் வேதனைகள்
புத்தனுக்கே போதனைகள்
போதிக்கின்ற நாடு இது
சத்தான உணவுமில்லை
சரிவர தூக்கமில்லை
பித்துப் பிடித்து அலைகின்றோம்
பிச்சைக்காரர் ஆகிவிட்டோம்
முத்துக் கொழிக்கும் நாட்டில் இன்று
முழி பிதுங்கி நிற்கின்றோம்
✍️ இணுவை நித்தியதாஸ் ✍️
Comments
Post a Comment