முத்தற்ற பெடிக்கு மூளை கழண்டுபோச்சு

 முத்தற்ற மூத்த பெடி

முறுக்கிக்கொண்டு திரிஞ்ச பெடி 

மூலை முடக்கெல்லாம்

மடக்கி வெட்டி ஓடின பெடி 


முகம் பார்த்து சிரிக்கமாட்டான்

முகப்புத்தகத்தில் மட்டும் சிரிப்பான்

முன் நின்று பேசமாட்டான் 

மூஞ்சியை விறைப்பாவே வச்சிருப்பான் 


சின்னப் பெடியன் பெரிய நினைப்பு

சினேகிதங்கள் கூடிப்போச்சு

சிகரெட்டு தண்ணி எண்டு

சீரழிஞ்சு போயிட்டான் 


அல்லும் பகலும் ஓட்டம்தான் 

அக்கம் பக்கம் பாக்கமாட்டான் 

சிக்னல் போட்டு திரும்பமாட்டான் 

சிக்னலிலும் நிக்கமாட்டான் 


அவசரத்தில போறான் எண்டு

அம்புலன்ஸே வழிவிட்டு நிக்கும் 

ஆளைக் கண்டு கனகாலம்

ஆரன் கண்டியளோ எங்காவது 


சைக்கிள் ஓடி ஓடியே 

சைக்கோ ஆயிட்டதாக ஒரு கதை

பைக் ஓடுற நினைப்பில

பென்டில வெட்டி விழுந்தெழும்புறானாம் 


பெற்றோல் லைனில் நிற்பதாக

பாத்த சிலர் சொல்லிப் போயினம் 

சைக்கிளுக்கு அடிக்கச் சொல்லி

செட்காரரோடு சண்டையாம்

Comments