இணுவில் பெருமஞ்சம்
மஞ்சம் காண வாரீர் பெருமஞ்சம்
காண வாரீர்
நெஞ்சம் நிறைந்த அழகன் திருமஞ்சம் காண வாரீர்
கொஞ்சும் தமிழ்க் குமரன் பெருமஞ்சம் காண வாரீர்
விஞ்சும் அவன் அழகை விரைந்து
காண வாரீர்
விழாக்கோலம் பூண்ட இணுவிலிலே
வீழா வீரம் கொண்ட மண்ணினிலே
கலாப மயிலாடும் கந்தன் வீதியிலே
உலாப்போகும் பெருமஞ்சம் காண வாரீர்
வீதி மருங்கில் மாவிலை தோரணங்கள்
சேதி சொல்லும் தோரணை பாரீர்
ஆதிசிவன் பாலகனை காண வாரீர்
மேதினியில் பெருமஞ்சம் காண வாரீர்
காவடிகள் ஆடிவரும் -கந்தன்
சேவடியை நாடி வரும்
பால் குடம் பவனி போகும்- எங்கள்
கால் தடம் அதன் வழி போகும்
சங்குவேலி வயற்பரப்பில் புதுநெல் எடுத்தே
பொங்கலிட்டு கந்தனுக்கு படைத்திடுவோமே
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊரிலே
எங்கள் பெருமஞ்ச நாயகனை போற்றிடுவோமே
இணுவைக் கந்தா சரணம்🙏
Comments
Post a Comment