என் கனா


நேற்றுப் பொழுதினில் 
நீண்ட  இரவினில் 
நெடிய கனவொன்று
கண்டிருந்தேன்

வேற்று உலகொன்றில்
வேறெவருமின்றி
நானும் அவளும்
தனித்திருந்தோம்

ஆற்றங்கரையினில்
அந்திப் பொழுதினில்
அவளை அணைத்தே
அமர்ந்திருந்தேன்

காற்று வெளியினில்
கூந்தல் உலர்த்தியே
காந்த விழிகளை
ரசித்திருந்தேன்

ஊற்று இதழ்களில்
ஊறிய அமிர்தத்தை
உதடுகள் கொண்டே
சுவைத்திருந்தேன்

நூற்றுக் கணக்கில்
நுழையவிருந்த தேனீக்களின்
நுழைவு மறுக்கப்பட்டு
எனக்கு மட்டும்
அனுமதி கிடைத்திருந்தது

ஏற்றுக் கொண்டதும்
எப்போது நடந்ததென
எண்ணிய பொழுதினில்
என் கனா கலைந்ததே

Comments