நல்லூர் அழுக்கொடு அலைந்த அசுரன்

 அழுக்கொடு அலைந்த அசுரன்

    இழுக்காறு களைந்த கந்தவேலா 

ஆணவத்தில் இருந்தவனை

    ஆட்கொண்டு அருளிய அருளாளா

அனைத்தும் ஆகிய இறையே 

    ஆக்கும் காரணப் பொருளே 

அனுதினம் உனைத் தொழுமென்னை

    ஆட்கொள்ள மறுப்பதுமேன் 

உனை எதிர்ப்பவனை மட்டும் தான்

    ஆட்கொள்வாய் எனில்       

உடன் எதிர்க்கவும் துணிவேன்

     எனைத் தடுத்தாட்கொள் என் ஐயனே.!


நல்லைக் கந்தா சரணம் 🙏🙏🙏

ஓம் சரவணபவ 🙏🙏🙏


✍🏻️இணுவை நித்தியதாஸ் ✍🏻️

 Nallur Kanthaswamy Kovil Nallur Kandaswamy Temple Nallur Kandaswamy Temple nalluran.com Velmuruhan Vel Vel Sindu Pathmasri RISHI Photography

#நல்லூர் #நித்தியதாஸ்

Comments