இலங்கையில் வாழ்ந்துபார்...

 இலங்கையில்   வாழ்ந்துபார்...


இலங்கையில்   வாழ்ந்துபார்..
உன்னை சுற்றி கடன்தொல்லை கூடும்
ராத்திரியில் விலைவாசி ஏறும்
கேட்டவுடன்  pressure லெவல் ஏறும்
நீயும் கடனாளி ஆவாய்

பெற்றோல் வரிசைக்கு ஒரு பிள்ளை
காஸ் வரிசைக்கு ஒரு பிள்ளை
பாண் வரிசைக்கு ஒரு பிள்ளை
பால் வரிசைக்கு ஒரு பிள்ளை
என்று சொல்லிச் சொல்லி
வரிசையாக நாலு பிள்ளை பெறுவாய்

இலங்கையில்   வாழ்ந்துபார்....

ராத்திரி பகல் தெரியாது
காத்திருப்பாய் மணிக்கணக்காய்
பெற்றோல் செட்காரன் தெய்வமாவான்
அரை லீற்றர் கிடைத்தாலும்
அமிர்தமாய் உணர்வாய்

குறுக்கே யாரும் வந்தால்
உனக்கும் கோபம் வரும்
கண்கள் ரெண்டும் சிவந்துகொள்ளும்
கைகள் ரெண்டும் முறுக்கேறும்
இறுதியில் உனக்கும் கெட்ட வார்த்தை வரும்

இலங்கையில் வாழ்ந்துபார்....

இந்த சங்கிலி
இந்த மோதிரம்
இந்த கடுக்கன்
இந்த அரைநாண் கயிறு
எல்லாம்
அரசால்தான் அடகு என்பாய்

இந்த வீட்டுக்கடன்
இந்த வாகனக்கடன்
ஏன் மொபைல் data கடன் கூட
இந்த அரசாங்கத்தின் ஏற்பாடு என்பாய்

இலங்கையில்  வாழ்ந்துபார்...

அரசாங்க சம்பளம் அரச கடனுக்கே கழிய வேண்டுமா
அதற்காகவேனும்

வேற்றுக்கிரகத்தில் வாழும்
உணர்வு வேண்டுமா
அதற்காகவேனும்

வாக்காளரை விட வேட்பாளரை
அதிகமாக பார்க்க வேண்டுமா
அதற்காகவேனும்

பால்மா இல்லாமல் வாழமுடியுமே
அதற்காகவேனும்

பெற்றோல் இல்லாமல் வாழமுடியுமே
அதற்காகவேனும்

மின்சாரம் இல்லாமல் வாழமுடியுமே
அதற்காகவேனும்

சூடு சொரணை இல்லாமல் வாழமுடியுமே
அதற்காகவேனும்

நாடு என்ற சொல்லுக்கும்
நரகம் என்ற சொல்லுக்கும்
அகராதியில் இல்லாத
அர்த்தம் வேண்டுமா
அதற்காவேனும்

அழுது கொண்டே சிரிக்கவும் முடியுமே
சிரித்துக்கொண்டே அழவும் முடியுமே
அதற்காகவேனும்

இலங்கையில் வாழ்ந்துபார்... 

Comments