முருகன்_வள்ளி_காதல்

 💚முருகன்❤வள்ளி காதல் 💚

💚🦚மயிலே தூது செல்🦚💚[4]


பூசை எதுவும் தேவையில்லை

நேசக்குறத்தி பாசம் மட்டும் போதும் 


பூக்கள் எதுவும் தேவையில்லை

பூவையவள் அருகிருந்தால் போதும்


சந்தன வாசம் தேவையில்லை

வஞ்சியவள் வாசம் மட்டும் போதும்


சாமரங்கள் தேவையில்லை

அவள் தேகம் தொட்ட தென்றல் போதும்


மயில் தோகை தேவையில்லை

மங்கையவள் தோகைக் கூந்தல் போதும்


தேனும் திணைமாவும் தேவையில்லை

வள்ளியவள் தேனிதழ்கள் போதும்


வண்ண மயிலே தூது செல்

வள்ளிக்குறத்தி காதில் சொல் 

💚💙💚


✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️

#நல்லூர் #நித்தியதாஸ் #முருகன்_வள்ளி_காதல்

Comments