பனங்காய் பணியாரமே!
பனங்காய் பணியாரமே!
சுணங்காம வாயேண்டி!
கொக்கறையா காயிறண்டி!
அக்கறையா தாயேண்டி!
சிரித்தாயே குருத்தோலையாய்
விழுந்தேனே காவோலையாய்
கருப்பட்டிக் கண்ணுக்குள்ள நானும்
உருப்படியா தொலஞ்சேனே!
கள்ளூறும் உன் பார்வை
உள்ளூற என்னோ பண்ணுதடி!
நொங்கு உதடு ரெண்டை
நோகாமல் குடிக்கப் போறன்
ஒத்தைப் பனை மரமாய்
ஒத்தையில நிக்கிறண்டி
ஓலைக் குடிசையில
ஒடியல் கூழ் செஞ்சு தாடி!
சேலைத் தலைப்பில் என்னை
சேர்த்தே முடிஞ்சுக்கடி!
Comments
Post a Comment