பரராசசேகரன் திருமஞ்சம்

 மஞ்சத்திலே பவனி மஞ்சத்திலே பவனி

நெஞ்சத்திலே மகிழ்ச்சி நெஞ்சத்திலே மகிழ்ச்சி

பஞ்சமுக விநாயகன் பரராச சேகரன் 

குஞ்சர முகத்தோனால் செழிப்புறும் அவனி 


மஞ்சத்திலே பவனி மஞ்சத்திலே பவனி

விஞ்சிடும் அழகுக்கு ஈடு இணையேது

வெஞ்சமரில் வென்ற வேலவனும் இன்று 

கொஞ்சிடும் வள்ளி தெய்வயானையொடு

பவனி


மஞ்சத்திலே பவனி மஞ்சத்திலே பவனி

அஞ்சிடும் பகைகளும் அருகினில் நீயிருந்தால்

துஞ்சுவேன் தூயவனே நின் கழலடி இக்கணமே

தஞ்சமென வந்தேன் தடுத்தென்னை ஆட்கொள்வாயா 🙏🙏🙏


✍️இணுவை நித்தியதாஸ்✍️

Comments