பெற்றோல் பரிதாபங்கள்
இரவுகளும் நீளுதே உன் நினைவுகளும் வாட்டுதே!
வரவினை எதிர்பார்த்தே என் வாலிபம் தேயுதே!
குரங்கினை போலே மனம் குழம்பித் தெளியுதே!
நிரம்பாதா என் தாங்கியும் உன்னிடம் வாங்கியே!
வரிசையில் நின்றே நான் தூங்கினேன்
தரிசனம் கிடைத்திட தினம் ஏங்கினேன்
கரிசனை கொஞ்சம் காட்டிப்போவாயா!
எரிபொருள் கொஞ்சம் தந்து போவாயா!
ஒருமுறையேனும் திருமுகம் காட்டாயோ!
வரும் வழியெங்கும் இருமருங்கிலும்
திருவிழாபோல் அலங்கரித்துன்னை வரவேற்கிறோம்
தருவாயா ஒரு லீற்றர் பெற்றோல்
🥲❤
Comments
Post a Comment