முருகன் ❤ வள்ளி காதல் [2]

 முருகன் ❤ வள்ளி காதல் [2]


ஒருதலைக் காதல் ஒன்றை 

ஒருத்தி மேல் கொண்டிருந்தேன் 

திருமகளை அன்றொரு நாள்

வரும் வழியில் கண்டிருந்தேன் 


கருவிழியால் கவர்ந்திழுத்தாள் 

கார் குழலால் கட்டி இழுத்தாள்

இரு புருவம் உயர்த்தி நின்றாள் 

சருகெனவே தரையில் விழுந்தேன்


பருவ மங்கை அவளைக் கண்டு 

திருவதனமதில் மயங்கி நின்று 

பெரும் காதலொன்று கொண்டு 

இருதயமதை இழந்து நின்றேன் 


முருகான முகம் கொண்டவளின் 

அருகினிலே சென்றவளின் 

திருநாமம் என்னவென வினவிடவே 

திருவாய் மலர்ந்தாள் வள்ளியென்றே 


பிறிதொருநாள் பின்னே செல்ல 

அறியாதவள் போல் நடித்தாள் 

சீறிச் சினத்துக் கொண்டவள் 

வெறுத்தெனையும் வேண்டாமென்றாள் 


ஆறுதலை கொண்டவன் நான்

ஆறுதல் இன்றி இருக்கின்றேன்

வேறு துணை எனக்கில்லை

வெறுத்தாலும் அவளே துணை

❤❤❤

Nallur Kandaswamy Temple Nallur Kanthaswamy Kovil Nallur Kandaswamy Temple - நல்லூர் கந்தசுவாமி கோவில் Nallur Kandaswamy Temple Velmuruhan Vel Vel

#நித்தியதாஸ்

Comments