வள்ளிக்குறத்தி காதல் 💚 🦜கிளியே தூது செல்🦜[2]

 வள்ளிக்குறத்தி காதல் 💚

🦜கிளியே தூது செல்🦜[2]


பன்னிரு கண்ணிருந்தும் என்ன பயன்

பார்வைகள் என்மேல் விழவில்லையே

பன்னிரு கையிருந்தும் என்ன பயன் 

அணைத்திட அவனும் வரவில்லையே

பன்னிரு தோளிருந்தும் என்ன பயன்

நான் சாய்ந்திட ஒரு தோள் தரவில்லையே 

என்னழகன் நினைப்பிலே கண்ணீர் வடிக்கின்றேன்

வண்ணக்கிளியே நீ தூது செல்லாயோ 💚💚💚🙏🙏🙏


✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️

#முருகன்_வள்ளி_காதல்

#நித்தியதாஸ்

Comments