சந்நிதி முருகன் தீர்த்தம்
காற்று வந்து எந்தன் காதில்
கந்தன் நாமம் ஓதியதே
ஆற்றங்கரையில் மோதும் அலைகள்
அழகன் நாமம் கூறியதே
ஊற்றாய் என்னுள் இருக்கும் நாதன்
தேற்றி எனையும் ஆற்றுவோன்
ஏற்றுக்கொண்டு தினம் எனக்கு
ஏற்றம் தந்து அருளுவோன்
போற்றிக் கதிர்காமர் பூசித்த வேலன்
போற்றித் தொழும் அடியார் சூழ
தோற்றம் கொண்ட சந்நிதியில்
தீர்த்தமாடி மகிழ்கின்றான்
ஓம் சரவணபவ 🙏
சந்நிதி முருகன் துணை 🙏
✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️
Comments
Post a Comment