நல்லூர் தேர்

 ஆறு முகமும் அணிமுடிகளும்

அணிகலன்களும் அசைந்தாட


ஆறிரு தோளும் இணை கரங்களும் 

பெருத்த மார்பும் சேர்ந்தாட


கூறு செய்யும் திருவேலும்

குமரன் கையில் குதித்தாட


பூங்கழல்களும் பொற்குடைகளும்

அணிசடைகளும் இசைந்தாட


சேவல் கொடியும் கொடியிடையுடை 

மங்கையிருவரும் இணைந்தாட


நல்லை நகரின் வீதிதனிலே

தேரில் அமர்ந்து வரும் நாதா


மெல்ல மெல்ல அசைந்தசைந்து

அழகாய் ஆடி வரும் வேலா


இல்லை என்ற சொல்லுமின்றி

எல்லாம் அள்ளித் தருவோனே


அல்லல் அறுத்து அருகில் எனையும்

அணைத்து நீயும் அருள்வாயே


ஓம் சரவணபவ 🙏

நல்லைக் கந்தன் சரணம் 🙏


✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️


Nallur Kandaswamy Temple Nallur Kanthaswamy Kovil Nallur Alangara Kanthan - நல்லூர்க் கந்தசுவாமி கோயில் Nallur Kandaswamy Temple - நல்லூர் கந்தசுவாமி கோவில் Nallur Kandaswamy Temple Velmuruhan Vel Vel

#நித்தியதாஸ்

Comments