கந்தறுந்த நிலையில் உள்ளோம் கந்தையா
கந்தறுந்த நிலையில் உள்ளோம் கந்தையா
எங்கள் கந்தையா
காட்சி தந்து அருளுமையா கந்தையா
எங்கள் கந்தையா
சொந்த நாட்டில் வாழ்வதற்கே முருகையா
எங்கள் முருகையா
சோதனை மிக அதிகமையா முருகையா
எங்கள் முருகையா
நொந்த கதை சொல்லித்தீராது வேலையா
எங்கள் வேலையா
நொடிக்கொருமுறை நொந்துபோகிறோம் வேலையா
எங்கள் வேலையா
சந்தைகளில் காய்கறிகள் கந்தையா
எங்கள் கந்தையா
சொத்து வித்துத்தான் வாங்கவேண்டும் கந்தையா
எங்கள் கந்தையா
பந்தியிலும் ஒரு கறிதான் முருகையா
எங்கள் முருகையா
பிந்திவிட்டால் அதுவுமில்லை முருகையா
எங்கள் முருகையா
எந்த பொருள் வாங்கிடினும் வேலையா
எங்கள் வேலையா
இந்தப் பணம் போதவில்லை வேலையா
எங்கள் வேலையா
எந்தத் தொழில் செய்வதென்று கந்தையா
எங்கள் கந்தையா
எங்களுக்கு தெரியவில்லை கந்தையா
எங்கள் கந்தையா
முந்தி ஒரு காலத்திலே முருகையா
எங்கள் முருகையா
முத்துக் கொழிக்கும் நாடு இது முருகையா
எங்கள் முருகையா
பிந்தி வந்த ஆட்சியரால் வேலையா
எங்கள் வேலையா
பின்தங்கிப் போனோமையா வேலையா
எங்கள் வேலையா
நந்தி போல குறுக்கே சிலர் கந்தையா
எங்கள் கந்தையா
நகர மறுத்து நிற்கின்றனர் கந்தையா
எங்கள் கந்தையா
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினம் முருகையா
எங்கள் முருகையா
வேலைக் கொண்டு வெளியேற்றிடு முருகையா
எங்கள் முருகையா
சந்ததியை காத்தருளும் வேலையா
எங்கள் வேலையா
சந்நிதியை நாடி வந்தேன் வேலையா
எங்கள் வேலையா
இந்த நிலை தொடருமென்றால் கந்தையா
எங்கள் கந்தையா
உந்தன் வேலால் எம்மை கொன்றுவிடு கந்தையா
எங்கள் கந்தையா
Comments
Post a Comment