என் ஊர்

 

செம்பாட்டு புழுதி வாசம்
நம்மூரு இணுவில் நேசம் 
என் பாட்டன் கதைகள் எல்லாம்
காற்று வந்து காதில் பேசும்

இலந்தை முள்ளை திருத்தினாலும்
இணுவிலாரை திருத்தேலாது
குழந்தை போல மனசு கொண்டோர்
குழப்படிக்கும் குறைவே இல்லை

கிழங்கெண்டு பேரேடுத்த
ஊரடா-நல்ல
வளங்கள் நிறைந்த நம் ஊரடா
புகையிலைக்கு பெயர் போன ஊரடா
பொன் விளையும் விவசாய பூமியடா

பண்டிதரும் பாவலரும் கொண்ட ஊர்
பண்பாடு பலகலைகள் காக்கும் ஊர்
விளையாட்டு, வீரங்கள் நிறைந்த ஊர்
விலை போகா மதத் திமிரை கொண்ட ஊர்

வானுயர்ந்த கோபுரங்கள் இங்குண்டு - ஊர்
எல்லை காக்கும் சாமிகளும் இங்குண்டு
கண்கவரும் காட்சிகளும் இங்குண்டு- போர்க்
குணம் கொண்டோர் வரலாறு பலவுண்டு 

Comments