❤வள்ளிகுறத்தி காதல் ❤ 🦜💚கிளியே தூது செல்💚🦜[4]

 ❤வள்ளிகுறத்தி காதல் ❤

🦜💚கிளியே தூது செல்💚🦜[4]


மாவிளக்கு ஏற்றி வைத்தேன்

மனதில் அழகனை வைத்தேன் 

பூவிழியை வழியில் வைத்தேன்

புன்னகையை தொலைத்து நின்றேன் 


நாவிலவன் நாமம் உச்சரித்தேன்

நாயகனை தினம் நினைத்திருந்தேன்

கோவிலிலே காத்திருந்தேன்

கந்தனை எதிர்பார்த்திருந்தேன் 


தேவியிவளை தவிக்கவிட்டே 

தேடி வராமல் எங்கு சென்றானோ 

காவியுடை கொண்டானோ

காசிக்குத் தான் சென்றானோ 


கூவிடும் சேவல் குரல் கேட்டதும் 

குமரன் வந்தானோ தேடுகின்றேன்

ஆவி விடுத்திடுவேன் நான் 

அழகன் வரவில்லை என்றால் 


வண்ணக்கிளியே தூது செல்

வடிவழகன் காதில் சொல் 

❤❤❤


✍🏻 ️இணுவை நித்தியதாஸ் ✍🏻️

#நல்லூர் #நித்தியதாஸ் #முருகன்_வள்ளி_காதல்

Comments