நல்லைக் கந்தன்

 வேதாகமப் பொருளே வேலான மெய்ப்பொருளே 

வேராக ஊன்றி உள்ளிருப்போனே.! 


ஆதாரமான இறை ஆசாரமாகத் தொழ 

ஆகாரமின்றி நானிருப்பேனே.! 


பாதார விந்தம் பணிந்திடவே வந்தேன் 

போதாது மீண்டும் வருவேனே.! 


தீதான பகையும் மோதாது எனையும்

ஓதாது உனையும் மறப்பேனோ.! 


நாதா உனை நானும் நாவாரப் பாட

நாவில் எந்நாளும் இனிப்பாயே.!


பூதா விதானம் நாலா புறம் கொண்ட

மூதான நல்லைப் பெருமாளே.! 


ஓம் சரவணபவ 🙏🙏🙏


✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️

#நல்லூர்2022 #நித்தியதாஸ்

Comments