மஞ்சத்தடி
ஒளியாக என்னுள் வளர்கின்ற இறையே
அழியாத வாழ்வை தருவோனே
விழியாலே கருணை பொழிகின்ற முருகா
வழியெங்கும் துணையாய் வருவோனே
கிளியான அருண கிரிநாதன் தோளில்
அழகாக அமர்ந்து வரும் நாதா
துளியேனும் உன்னை நினையாமல் நானும்
எளிதாக மறந்து இருப்பேனோ
மஞ்சத்தடி முருகா சரணம் 🙏
இணுவில் மஞ்சத்தடி
Comments
Post a Comment