நல்லதுக்கு காலம் இல்லை
நன்மை செய்ய ஆளும் இல்லை
எல்லாத்திலும் அரசியல்
இதை சொன்னா என்னை எதிர்ப்பியள்
பொல்லாத அரசியல்
இது புரியாத அரசியல்
தொட்டத்துக்கும் அரசியல்
கெட்டதிந்த அரசியல்
கண்டதிலும் அரசியல்
எண்டு சொன்னா சிரிப்பியள்
காலகாலமாய் நடக்குது
கலிகாலம் புரிவியள்
உண்ணும் உணவில் அரசியல்
மண்ணைக் காக்க அரசியல்
உரிமைக்கான அரசியல்
இல்லை இது கதிரைக்கான அரசியல்
கதவடைப்பு போராட்டம் என்பார்
அதில் தமக்கு இலாபம் என்பார்
கடைக்காரனோ நஷ்டம் என்பான் கண்டுக்கவே மாட்டார் எவரும்
போராட்டத்தின் நோக்கத்தை மறந்து
போராட்டம் தொடங்கியது யாரால என போராடுவர்
பாராளுமன்றத்தில் காரசாரமாக பேசுவார்
இராப்போசனத்தில் காரம் புளி என்று குலவுவார்
தீபாவளிக்கு தீர்வு என்பார்
வாழ்த்து சொல்வதையே மறந்திடுவார்
பொங்கி எழுவதையே பொழுதாக கொள்வார்
பொங்கலை கொண்டாட மறந்திடுவார்
ஆரம்பத்தில் எதையும் கண்டுக்கார்
பாராமுகமாய் இருந்திடுவார்
ஆராதனைகள் ஆரம்பித்த பின்
ஆர்ப்பாட்டங்கள் செய்திடுவார்
நல்லதுக்கு காலம் இல்லை
நன்மை செய்ய ஆளும் இல்லை
எல்லாத்திலும் அரசியல்
இதை சொன்னா என்னை எதிர்ப்பியள்
.jpeg)
Comments
Post a Comment