பொன்னை நிகர்த்த நிலவே 

என்னை விட்டு ஏனடி நீங்கினையோ

தன்னந் தனிமையிலே மயிலே

ஏன் என்னைத் தவிக்கவிட்டாய் 💔 


ஆங்கு நின் நினைவில் அன்னமே

ஏங்கியே அழுகின்றேன் 

தீங்கென்ன செய்தேனடி என்னைவிட்டு 

நீங்குதல் முறைதானோ 💔


முற்றத்து மல்லிகையே அழகே 

நற்றுணை நீயலையோ  

பற்றற்று போனியடி உயிரே 

சுற்றிலும் வெறுமையடி 💔


காதல் போர்க்களத்தில் சகியே 

எதிரணி நீயலையோ

சாதல் வேண்டுமெனில் உனக்கே

சாதகமாய் தந்திடுவேன் ❤💔


#இணுவை_நித்தியதாஸ் 

#சின்னஞ்சிறு_நிலவே_பிரதிபலிப்பு


Comments