எது அதுவோ எனை ஈர்த்தது

மெதுமெதுவாய் உடல் வேர்த்தது

மதிமுகமோ மதுக்குடமோ மயக்கியது

நதிசடையோ நக தூரிகையோ இழுத்தது  


அதிரசமோ அவள் உதடோ

அதில் சுகமோ அதிகதிகமோ

புதிதெதுவோ பூவையிவள் மேனியில்

ரதி இவளை ரசிப்பதுதான் விதியாமோ


விதிக்கும் கட்டளைகள் இவள் கண்களே

எதுக்கும் நான் அடி பணிவேனே 

கொதிக்கும் என் இதயம் அறிவாளோ

விதி இதுதான் என நோவேனோ


கதி இவளே என கிடக்கின்றேன் 

வதிவிடம் அறிந்தாரும் சொல்வாரோ

முதுமை வருமுன் சென்றடைவேனோ

மிதிபட்டேனும் நான் சாவேனோ


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அழகியே ❤

Trisha Krishnan


Comments