நிலவும் வானம் உடுத்தி
உலாவி வரக் கண்டேன்
அழகு சிலை இவள் மேல்
அலாதி பிரியம் கொண்டேன்
வரவை எதிர்பார்த்திருந்தேன்
வரங்கள் வேண்டி நின்றேன்
விரல்கள் அசைத்து நின்றாள்
விரதம் கலைத்து நின்றேன்
கண்மணி வருகையிலே
கண்ணிமைக்க மறந்தேனே
புன்னகை உதிர்ந்தாளே
புத்துணர்ச்சி பெற்றேனே
மல்லிப்பூ கொண்டையிலே
மயங்கி நானும் நின்றேனே
அள்ளி முடிந்த கூந்தலிலே
அத்தனை அழகு கண்டேனே
பவ்வியப் பேச்சில் நானும்
பக்குவம் அடைந்தேனே
செவ்விதழ் அமிர்தத்தை
எவ்விதம் அடைவேனோ ❤

Comments
Post a Comment