இணுவில்_சிவகாமி_அம்மன்_

 நாத இசையினில் நாகம் அசைந்திட

        நாயகி அசைந்தாடி வருகின்றாள்

மாதம் பங்குனியில் நாமும் கூடிட

       மனம் மகிழ்ந்தாடி வருகின்றாள்

மோதகப் பிரியனும் பாதம் தூக்கியே 

       மேள தாள இசையில் ஆடுகின்றான்

வேதம் ஒலித்திட வேதியர் செபித்திட

        வேலவனும் ஆடி வருகின்றான் 

பாதக் கமலங்களில் பாவம் கழிந்திட

        பார்வதியை நாமும் தொழுவோமே


ஓம் சக்தி தாயே ❤🙏❤

#இணுவில்_சிவகாமி_அம்மன்_கோவில்_பெருந்திருவிழா_2023 #5ம்_நாள்

Comments