இணுவில்_சிவகாமி_அம்மன்

 திருக்கயிலை ஏகினாள் சிவகாமி 🙏


சந்திரனும் கீழிறங்கி ஒளி கொடுத்து நிற்க

இந்திரன் முதலான தேவர்கள் வரவேற்று நிற்க 

அந்தணர் மந்திரங்கள் ஓதிட அடியவர் சூழ நிற்க

அன்னை சிவகாமி திருக்கயிலை ஏகினாள் 


திங்கள் முக மங்கை செங்கண் மாலின் தங்கை

தங்க நிற மேனியள் தன்னிகர் இல்லாதாள் 

சங்கடங்கள் தீர்த்திடும் எங்கள் சிவகாமி 

சங்கரனும் துணையாக திருக்கயிலை ஏகினாள் 


முந்தி உதித்தான தந்தம் முறித்தான தொந்தி பெருத்த கணபதியும் உடன் ஏக

பிந்தி உதித்த கந்தக் கடவுளும் ஈறாக மங்கையிருவரொடு கயிலைஏகினார் 


நந்தியானவரும் வரவேற்று நின்றார் 

வந்த நாரதரும் அன்னையை உவகைகொளச்செய

சிந்தை மிகுதியாய் மகதி இசைத்து பாடினார்

நந்தியானவரும் இணைந்து பாடினார் 


தந்தி அறும்வரை இராவணனும் 

சந்தமுடன் சிந்து பாடினான் 

சிந்தையில் நிறைந்த சிவகாமி - ஈற்றில் 

வந்தடைந்தாள் இணுவையம்பதியை


ஓம் சக்தி தாயே ❤🙏❤


#இணுவில்_சிவகாமி_அம்மன்_கோவில்_பெருந்திருவிழா_2023

#8ம்_நாள் 


Inuvil Sivakami Amman Kovil

Comments