அச்சம் மடம் நாணம் கொண்டே
அச்சுறுத்தும் அழகியவள்அச்சாறாய் எச்சில் ஊறும்
அச்சில் வார்த்த பாவையவள்
அவசரமாய் பூக்கள் பூப்பதேன்
அவள் சரமாய் மாறிடத்தானோ
அவள் வசமாய் தென்றல் நுழைவதேன்
அவள் வாசம் வீசிடத்தானோ
அதிசயமே அசர வைத்தாள்
அதிரசத்தை உதட்டில் வைத்தாள்
அதிகாரம் அதிகம் வைத்தாள்
அதிகமாக காதல் வைத்தேன்
அழகினிலே உறைய வைத்தாள்
அழகியலின் அர்த்தம் காட்டினாள்
அழகியவளை நெஞ்சில் வைத்தேன்
அழுதரற்றுகின்றேன் அவள் நினைவில்
Comments
Post a Comment